என்னோட தயாரிப்பு கம்பெனிக்கு அவ பேர தான் வைக்கபோறேன் – பிக் பாஸ் போட்டியாளரின் பெயரை சொன்ன ராபர்ட் மாஸ்டர்.

0
487
robert
- Advertisement -

தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு பிக் பாஸ் போட்டியாளரின் பெயரை தான் வைக்கப்போவதாக ராபர்ட் மாஸ்டர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடன இயக்குனராக இருந்தவர் ராபர்ட் மாஸ்டர். இவரின் முகம் தெரிவதற்கு அதிக காரணமாக இருந்தது வனிதா விஷயத்தில் தான். இருவரும் காதலித்து வந்த நிலையில் வனிதாவின் பெயரை கூட தன் கையில் டாட்டூவாக குத்தி இருந்தார் ராபர்ட் மாஸ்டர்.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் இவர் சினிமாவில் நடன இயக்குனராக கொடி கட்டி பறந்து இருந்தார். பின் இடையில் இவருக்கு வாய்ப்புகள் பெரிதாக வராததால் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பின் ராபர்ட் மாஸ்டர் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதற்கு பின் தான் இவருக்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து ராபர்ட் மாஸ்டருக்கு ரக்ஷிதாவின் மீது ஒரு கண் வைத்து இருந்தார்.

- Advertisement -

ராபர்ட் மாஸ்டர் குறித்த தகவல்:

மேலும், காதலுக்கு வயது இல்லை என்று சொல்லி கொண்டு அவர் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை. ரக்ஷிதா என்ன செய்தாலுமே அதை மாஸ்டர் ரசித்துக் கொண்டே இருந்தார். ஆனால், ரக்ஷிதா அதை கண்டுகொள்ளாமல் தன் விளையாட்டில் கவனம் செலுத்தி இருந்தார். இதனால் இவரின் மீது பல விமர்ச்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது. பின் கடந்த வாரம் குறைந்த வாக்குகள் அடிப்படையில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறி இருந்தார். ஆரம்பத்தில் ராபர்ட் மாஸ்டர் ஸ்ட்ராங்கான போட்டியாளராக இறுதிவரை வருவார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது.

ராபர்ட் மாஸ்டர் அளித்த பேட்டி:

ஆனால், இவர் ரக்ஷிதா பின் சுற்றிக்கொண்டு செய்த சேட்டைகளால் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து இருந்தார். இதனாலே இவர் வெளியேறுவதற்கு காரணம் என்று கூறி இருக்கிறார்கள். இந்த நிலையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியே பிறகு ராபர்ட் மாஸ்டர் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, உறவைத் தேடி தான் நான் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தேன் என்று ஆரம்பத்தில் சொல்லியிருந்தேன். நான் எதைத்தேடி போனேனோ அது எனக்கு கிடைத்துவிட்டது. குயின்சி எனக்கு மகளாக கிடைத்தது ரொம்ப சந்தோஷம்.

-விளம்பரம்-

குயின்சி குறித்து சொன்னது:

அதுமட்டுமில்லாமல் என்னுடைய புரொடக்ஷன் கம்பெனியோட பெயரே குயின்சி என்றுதான் வைக்கப் போறேன். அவள் பேரளவில் மட்டுமல்ல உண்மையாகவே என் சொந்த பொண்ணாக தான் நான் நினைக்கிறேன். மேலும், எனக்கு சத்தம் போடுவது சுத்தமாகவே பிடிக்காது. நான் எப்பவுமே ஜாலியாக சிரித்துக்கொண்டே மத்தவங்களை சிரிக்க வைத்தும் இருப்பேன். அங்க போடுற சண்டை எல்லாமே வேற லெவல்ல இருந்தது. அதனால் பெரும்பாலும் நான் சண்டைக்குள் போக விரும்பவில்லை. எனக்கு கிரஷ்ஷாக ரக்ஷிதாவை பிடிக்கும்.

ரக்ஷிதா குறித்து சொன்னது:

அதனால் அவளை பார்த்துக் கொண்டே இருந்தேன். என்னோட கேர்ள் ஃபிரண்ட் பெங்களூரில் இருக்கிறார். அவங்க மூக்குத்தி போட்டு இருப்பாங்க. அதேபோல் ரக்ஷிதா எனக்கு பிடித்த பெண். அவங்களும் மூக்குத்தி போட்டு இருந்தாங்க. அதனாலதான் அவங்களை மூக்குத்தி என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தேன். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் வீட்டில் என்னை பலரும் பயன்படுத்தி விட்டார்கள். என்னை ஏமாற்றுவதற்காகவே இருப்பார்கள். நிகழ்ச்சிக்கு பின் சிம்பு என்னை மீட் பண்ண வர சொல்லி இருக்காரு என்று சந்தோசமாக கூறியிருக்கிறார்.

Advertisement