ஷிவின் மேக்கப்பை அழிக்க செய்து கேலி செய்த ராபர்ட் – வைரலாகும் வீடியோ. திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

0
215
robert
- Advertisement -

சிவினிடம் ராபர்ட் மாஸ்டர் நடந்து கொண்டது சரி இல்லை என்று நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வரும் பதிவு சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது ஆறாவது வாரம் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஜிபி முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல், ஷெரினா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். இந்த முறை நிகழ்ச்சியில் சிவின் கணேசன் என்ற திருநங்கை கலந்து கொண்டு இருக்கிறார். இவர் வீட்டுக்கு ஒரே பையன். இவர் திருநங்கையாக மாறியவுடன் இவருடைய விருப்பத்திற்கு வீட்டில் ஆதரவு கொடுக்கவில்லை.

- Advertisement -

சிவின் கணேசன் குறித்த தகவல்:

இதனால் இவர் வேலை தேடி சிங்கப்பூர் சென்றார். சில ஆண்டுகள் இவர் அங்கேயே இருந்தார். அதற்குப் பின்னர் இவர் மீண்டும் இந்தியா வந்தார். ஆனால், இவர் திரும்பி வந்ததை அவர்களுடைய வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை. அதோடு இவர் தன்னுடைய அம்மாவை கூட சந்திக்கவில்லையாம். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் இதுவரை தன்னிடம் பேசாத அம்மா பேசுவார் என்று எதிர்பார்த்து இந்த நிகழ்ச்சியில் சிவின் கணேசன் கலந்து கொண்டு இருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் சிவின் கணேசன்:

மேலும், இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து சிவின் கணேசன் மிகச் சிறப்பாக விளையாடி கொண்டு வருகிறார். இவர் பல அவமானங்கள், கிண்டல்களை சந்தித்தாலும் அதை எல்லாம் எதிர்கொண்டு தைரியமாக விளையாடி வருகிறார். அதோடு இந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆக சிவின் இருப்பார் என்றும் ரசிகர்கள் மத்தியில் கூறப்பட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, சிவின் கணேசன் நிகழ்ச்சியில் தன்னை அழகாக காண்பிப்பதற்காக எப்போதும் மேக்கப் விஷயத்தில் கவனமாக இருப்பார்.

-விளம்பரம்-

சிவின் கணேசன் மேக்கப்:

அதிலும், வார இறுதியில் சிவின் எந்த மாதிரி உடை அணிந்து எப்படி வருவார் என்று பார்ப்பதற்கே ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த அளவிற்கு அவர் தன்னுடைய அழகு விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் ராபர்ட் மாஸ்டர் சிவினுக்கு கொடுத்திருக்கும் தண்டனை தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பி இருக்கிறது. அதாவது, தற்போது நிகழ்ச்சியில் ராஜா ராணி டாஸ்க் சென்று கொண்டிருக்கின்றது. ராபர்ட் மாஸ்டர் சிவினை பார்த்து, நீ மேக்கப் போடக்கூடாது. கிழவி மாதிரி இருக்கணும், கிழவி மேக்கப் போடு என்று தண்டனை கொடுத்திருக்கிறார்.

வறுத்து எடுக்கும் நெட்டிசன்கள்:

இதை பார்த்த நெட்டிசன்கள், இது தண்டனையாக தெரியவில்லை. தனிப்பட்ட முறையில் சிவினை தாக்கும் மாதிரி இருக்கிறது. தண்டனை என்பது பொதுவாக இருக்க வேண்டும். இப்படி தனிப்பட்ட முறையில் அவரை தாக்குவது தவறு என்று ராபர்ட் மாஸ்டரை பயங்கரமாக திட்டி வருகிறார்கள். அதே போல் ராபர்ட் ஷிவினுடன் பேசும் போது அவ மூஞ்சியே திருட்டு முழியா இருக்கு என்று சொல்ல அதற்கு ரஷிதாவும் அவ எப்பயும் அப்படிதான் இருப்பா, இப்போ கொஞ்சம் அதிகம் ஆகிடிச்சி என்று கமன்ட் அடித்துள்ளார்.

Advertisement