தன் மகளை நினைத்து கண்ணீர் விட்டு கதறி அழுந்திருக்கும் ராபர்ட் மாஸ்டர் உடைய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 12 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி, சிவின் கணேசன் மற்றும் நிவாஷினி என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. மேலும், இரண்டாம் வாரத்திற்கான டாஸ்கை பிக் பாஸ் கொடுத்து இருக்கிறார். இதற்கு கதை சொல்லும் நேரம் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய கதையை சொல்லிக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் ராபர்ட் மாஸ்டர் தன்னுடைய வாழ்க்கை குறித்து கூறியிருந்தது, எனக்கு சிறு வயதிலேயே போலியோ அட்டாக் ஆனது.
அதனால் என்னுடைய கால்கள் இரண்டும் நடக்க முடியாமல் இருந்தது. பின் என்னுடைய தந்தை தான் முயற்சி செய்து என்னை நடக்க வைத்தார். அதற்கு பின்பு நான் டான்ஸ் மாஸ்டர் ஆனேன். படிப்படியாக சினிமா படங்களில் நடன இயக்குனராக பணியாற்றினேன். இடையில் எனக்கும் ஒரு பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது. அந்த பெண்ணின் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை. நான் படிக்கவில்லை என்று அந்தப் பெண் என்னை விட்டு விலகி சென்றார்.
பின் இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. அப்போது எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. என் மகளுக்கு நான்தான் அப்பா என தெரியுமா? தெரியாதா? என்று கூட எனக்கு தெரியாது. என்னுடைய முதல் மனைவி இன்னொரு திருமணம் செய்து கொண்டார். என் மகளுக்கு நான் தான் அப்பா என்று நான் இறந்த பிறகாவது கூட சொல்லுங்கள். நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்த காரணமே இந்த நிகழ்ச்சியை பார்த்து பின்பாவது இவர் தான் என்னுடைய அப்பா என்பதை என் மகள் தெரிந்து கொள்வார் என்ற ஆசையில் தான்.
ஒரு நாள் என்னுடைய குழந்தைக்கு ஏழு வயது இருக்கும் போது அவருடைய தாய் என்னை பார்த்து அங்கிளுக்கு ஹாய் சொல்லு என்று சொன்னார். என் மகளும் என்னை பார்த்து ஹங்கிள் என்று கூப்பிட்டார். எனக்கு மிகப்பெரிய வலியை தந்தது என்று கண் கலங்கியபடி ராபர்ட் மாஸ்டர் கூறியிருக்கிறார். இப்படி இவர் கூறிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மேலும், ராபர்ட் மாஸ்டர் வத்திக்குச்சி வனிதாவின் கணவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இவர்கள் இருவரும் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்திருந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக ராபர்ட் மாஸ்டரை பிரிந்து விட்டார் வனிதா. அதுமட்டுமில்லாமல் ராபர்ட் மாஸ்டரும், வனிதாவும் இணைந்து ஒரு படத்தில் கூட நடித்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டர் கூறியிருக்கும் அந்த மகள் யார் என்று உங்களுக்கு தெரிந்தால் கமெண்டில் சொல்லுங்கள்.