அண்ணா என்றும் அழைத்தும் இப்படியா பண்ணுவீங்க – ரஷிதாவிடம் எல்லை மீறும் ராபர்ட் மாஸ்டர். திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

0
498
robert
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான சில முகங்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் ராபர்ட் மாஸ்டர் ரசிகர்களுக்கு பரிட்சயமான ஒரு முகம் தான். ராபர்ட் மாஸ்டரை பற்றி வெளியில் தெரிவதற்கு அதிக காரணமாக இருந்தது வனிதாவின் விஷயத்தில் தான். இருவரும் காதலித்து வந்த நிலையில் வனிதாவின் பெயரை கூட தன் கையில் டாட்டூவாக குத்தி இருந்தார் ராபர்ட் மாஸ்டர். தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். மேலும், நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து ராபர்ட் மாஸ்டருக்கு ரக்ஷிதாவின் மீது ஒரு கண் வைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

காதலுக்கு வயது இல்லை என்று சொல்லி கொண்டு அவர் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை. இவர், எனக்கு கேர்ள் பிரென்ட் இல்லை. அதனால் நம்முடைய இந்த நட்பு வெளியில் போயும் தொடர வேண்டும் என்றெல்லாம் ரக்ஷிதாவிடம் கூறியிருந்தார்.அதற்கு ரக்ஷிதா, நம்ம உள்ள வந்து சில நாட்கள் தானே ஆகிறது. பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு சூதனமாக தப்பித்து விட்டார். பின் ரக்ஷிதா என்ன செய்தாலுமே அதை மாஸ்டர் பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கிறார்.

- Advertisement -

தனக்கு காதலியே இல்லை எண்டு சொன்ன ராபர்ட் மாஸ்டர் தனக்கு வெளியில் ஒரு காதலி இருக்கிறார் என்று கூறி இருந்தார். அதோடு தனுக்கு திருமணம் ஆகி ஒரு மகள் இருக்கிறார் என்றும் தன் மனைவி தன்னை விட்டு சென்றுவிட்டார் என்றும் தன் மகளுக்கு நான் தான் அப்பா என்று தெரியாது தன்னை Uncle என்று தான் அழைக்கிறார் என்றும் கூறி இருந்தார். இத்தனை இருந்தும் ரஷிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் தொடர்ந்து வழிந்துகொன்டு தான் வருகிறார்.

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சிகள் ரட்சிதா ராபர்ட் மாஸ்டரை பார்த்து தென்பாண்டி தமிழே பாடலை பாடிக்கொண்டிருந்தார். அப்போது ‘அண்ணன்’ என்ற வார்த்தை வந்தபோது ராபர்ட் மாஸ்டரை கை காண்பித்து இருந்தார் ரஷிதா. உடனே ராபர்ட் மாஸ்டர் அப்போது நான் உனக்கு அண்ணனா என்று கேட்டு பின்னர் மைனா நந்தினியை அழைத்து நான் உனக்கு அண்ணன் தானே என்று கேட்டார் அதற்கு மைனா ஆமாம் என்று சொல்ல, அப்போது எனக்கு கன்னத்தில் முத்தம் கொடு என்றார்.

-விளம்பரம்-

ஆனால், அவர் கேட்டதை மறுத்த மைனா ‘எனக்கு உண்மையில் அண்ணன் கிடையாது இருந்தாலும் நான் உங்களுக்கு கையில் முத்தம் கொடுக்கிறேன் என்று ராபர்ட் மாஸ்டர் கையில் மொத்தம் கொடுத்தார். பின்னர் இப்படி ஒரு காஞ்சி போன அண்ணனை நான் பார்த்தது இல்லை என்று கேலி செய்து விட்டு சென்றார் மைனா. இதை தொடர்ந்து அருகில் இருந்த ரட்சிதாவின் கையை பிடித்துக் கொண்டு நானும் உனக்கு அண்ணன் தானே அப்போது நீ எனக்கு முத்தம் கொடு என்று ரட்சிதாவிடம் கேட்டார்.

அதற்கு ரஷிதா, நான் கையில் கூட முத்தம் கொடுக்க மாட்டேன். நான் அண்ணனுக்கு முத்தம் கொடுக்க மாட்டேன். கையெடுத்து கும்பிடுவேன் என்றார் இதை தொடர்ந்து ராபர்ட் மாஸ்டர் அவள் தான் என்னை அண்ணனாக பார்க்கிறாள். நான் அவளை கிரஷ்ஷாக தான் பார்க்கிறேன். அவளுக்கு உண்மையில் என் மீது எந்த ஃபீலிங்கும் இல்லை என்றால் நான் அண்ணன் என்று சொன்னதும் எனக்கு கையில் முத்தம் கொடுத்து இருப்பாள்.

பரவாயில்லை அவள் என்னை எப்படி வேண்டுமானாலும் பார்க்கட்டும் நான் அவளை கிரிஸ்ஸாக தான் பார்க்கிறேன் என்று கூறியிருந்தார். தற்போது ராபர்ட் மாஸ்டரின் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வர பலரும் திட்டி தீர்த்து வருகிறார்கள். அதிலும் ராபர்ட் மாஸ்டர் ஒவ்வொரு முறை ரட்சிதாவிடம் வழியும் போது ரஷிதாவின் முகமே மாறிவிடுகிறது. மேலும், ராபர்ட் மாஸ்டரின் செயல்களால் ரசித்த பலமுறை தர்மசங்கடத்தில் உள்ளாகி அதனை எப்படி வெளிக்காட்டுவது என்று தெரியாமல் தான் ரஷிதா முழித்து வருகிறார் என்றும் நெட்டிசன்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

Advertisement