லாஸ்லியா பைனலிஸ்ட்னு ஏறியுதா.! கமன்ட் செய்த கவின் ரசிகருக்கு சாக்ஷியின் பதிலை பாருங்க.!

0
60048
kavin-sakshi
- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமான பல்வேறு நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். அதேபோல ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். அந்த லிஸ்டில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு பரிட்சயமானவர் நடிகை சாக்ஷி அகர்வா ல்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை இவர் போட்டியாளர்கள் பற்றி புறம் பேசிகொண்டே இருந்ததால் ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்ட்டு வந்தார். இருப்பினும் ஒவ்வொரு வாரமாக எப்படியோ எலிமினேஷனிலிருந்து தப்பித்து கொண்டே வந்தார். ஆரம்பத்தில் கவினுடன் நெருக்கம் காட்டி வந்த சாக்க்ஷி அதன்பின்னர் அவர் லாஸ்லியாவிடம் நெருக்கம் காண்பித்ததால் கொஞ்சம் கவின் மீது கோபம் கொண்டார். இருப்பினும் இப்படி கவின் சாக்க்ஷி லாஸ்லியா ஆகிய மூவரின் முக்கோண காதல் ஒரு சில வாரங்கள் ஓடிக்கொண்டுதான் இருந்தது.

இதையும் பாருங்க : நான் அவன்ட காச வாங்கிட்டு சாப்பிட்டு போய்ட்டுவ.! நீங்க என்ன பண்ணுவீ ங்க.!

- Advertisement -

இறுதியில் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் சேர்ந்து சாக்க்ஷி ஓரம் கட்டி விட்டனர். இதனால் கவின் மீது கடும் கோபத்தில் இருந்து வந்தார் சாக்க்ஷி. அதே போல புக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போதும், உன்னுடைய உறவு முறிந்து விட்டது என்பதை எண்ணி நான் சந்தோசபடுகிறேன் என்று கவினிடம் கூறிவிட்டு வந்தார் சாக்க்ஷி. அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வீடியோ வெளியிட்ட சாக்க்ஷி, பொண்ணுங்கள டிரஸ் மாத்தற மாதிரி கவின் மாத்திட்டு போவியா கவின் என்றும் மோசமாக விமர்சித்திருந்தார்.

இதனால் கவின் ஆர்மியின் கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளார் சாக்க்ஷி . இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கடை திறப்பு விழா, கல்லூரி விழா என்று படு பிஸியாக இருந்து வருகிறார். இன்று ஒளிபரப்புகியுள்ள ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார் சாக்க்ஷி. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாக தர்ஷன் வெளியேற்றம் குறித்து ட்வீட் செய்திருந்தார் சாக்க்ஷி.

-விளம்பரம்-

அப்போது ஒரு சில ரசிகர்கள் கவினை வைத்து சாக்க்ஷியை திட்டி தீர்த்து வந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் உன்னிடம் இருந்து கவின் தப்பித்து விட்டார் என்று கூறியிருந்தார். அதற்கு சாக்க்ஷி, உன்னை போன்று ஆட்களுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை என்று கூறியிருந்தார். இருப்பினும் அந்த ரசிகர், லாஸ்லியா இறுதி போட்டிக்கு போய்ட்டார்னு எரியுதா? கவலை படாதே லாஸ்லியா கவினுக்கு தான் என்று கமன்ட் செய்திருந்தார்.

இதற்கு பதில் அளித்த சாக்க்ஷி , நான் எப்போதும் ஷெரின், முகென், சேரனுக்கு தான் ஆதரவாக இருந்து வந்தேன். நான் எப்போதும் மாற வில்லை. எனக்கு ஏன் எரியுது ? அந்த விஷமிகளிடம் இருந்து வெளியேறிதை நினைத்து நான் சந்தோச படுகிறேன், இவர்கள் இருவர் தான் இதற்கு சரியானார்கள் என்று பதில் அளித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இன்று சாக்க்ஷி பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். எனவே, லாஸ்லியாவிற்கும் சாக்க்ஷிகும் எதாவது சண்டை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement