நான் அவன்ட காச வாங்கிட்டு சாப்பிட்டு போய்ட்டுவ.! நீங்க என்ன பண்ணுவீங்க.!

0
69047
pradeep
- Advertisement -

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஒளிபரப்பி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 100 நாட்களை கடந்துள்ளது. இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் இந்த சீசனில் வெற்றி பெறப்போவது யார் என்பது இந்த வாரத்தின் இறுதியில் தெரிந்துவிடும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் அதில் ரசிகர்களின் அதிக ஆதரவை கொண்டவராக இருந்து வந்தார் கவின் தான். ஆனால் கடந்த வாரம் கவின் பிக்பாஸ் அறிவித்த 5 லட்ச ரூபாய் பரிசுத் தொகையை எடுத்துக் கொண்டு வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

-விளம்பரம்-

கடந்தவாரம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த முகெனை தவிர மற்ற அனைவருமே நாமினேஷனில் இடம் பெற்றனர். எல்லா வாரமும் போல கவின் தான் கடந்த வாரம் நடைபெற்ற ஓட்டிங்கில் அதிக வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருந்து வந்தார். எனவே, கவின் இருந்திருந்தால் அவர் நிச்சயம் தகுதி பெற்று இருந்திருப்பார். அதேபோல பிக்பாஸில் இருந்து கவின் வெளியேறிய போதும் கவினுக்கு இருந்த ஆதரவு என்னவென்று பலரும் அறிந்தனர்.

- Advertisement -

கவின் வெளியே வந்த பிறகு கவின் ஆதரவாளர்கள் அனைவருமே லாஸ்லியாவிற்கு தான் வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் லாஸ்லியாவிற்கு வாக்களிக்குமாறுகவினின் நெருங்கிய நண்பரும் அருவி பல நடிகருமான பிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கவினின் நண்பரான பிரதீப் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்தபோது கவின் விளையாடுவது கேவலமான கேம் என்று கூறியதுடன் அவரது கன்னத்தில் பளார் என்று அறைந்தார். மேலும், ஒரு வேளை நீ பிக்பாஸ் மேடையில் ஏறினால் அப்போது அனைவர் முன்பாக என்னை நீ அறைந்து கொள் என்றும் கூறியிருந்தார்.

ஆனால், துரதிஷ்டவசமாக கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறி இருக்கிறார் இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதீப் நீங்கள் அனைவரும் லாஸ்லியாவை வெற்றி பெறச் செய்தால் கவினுக்கு பதிலாக லாஸ்லியாவிடமிருந்து தான் அறை வாங்கிக் கொள்வதாகவும் கூறியுள்ளார். இறுதி போட்டிக்கும் இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் கவினின் நண்பரின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . அதே போல பிரதீப்பின் இந்த பதிவிற்கு கீழ் பல்வேறு கவின் ஆர்மியும் தங்களது ஆதரவு லாஸ்லியாவிற்கு தான் என்றும் பதிவிட்டு வருகின்றனர்

-விளம்பரம்-

இந்த நிலையில் கவினின் நண்பர் பிரதீப் மற்றுமொரு டீவீட்டை செய்துள்ளார். அதில் உங்களின் தேர்வை நான் மதிக்கிறேன் ஆனால் அதைவிட லாஸ்லியா தான் சிறந்த போட்டியாளர் என்று நான் நினைக்கிறேன் இது என்னுடைய கருத்து நான் இதனை விவாதிக்கும் வகையில் மனநிலையிலும் இல்லை ஒரு சிறந்த போட்டியாளர் என்று நானும் தான் நினைக்கிறேன் ஆனால் நான் ஒரு சிறந்த உள்ளம் கொண்ட நபர் என்று பதிவிட்டுள்ளார.

கவின் நண்பர் இப்படி ட்வீட் செய்து இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒரு சில பேர் இவரது கணக்கை பயன்படுத்தி கவின் தான் இந்த ட்வீட்டை செய்தார் என்று பலரும் கூறி வருகின்றனர். அதே போல மற்றுமொரு பதிவில் அரசியல்வாதிகள் என்றாலே தியாகிகள் தானே எல்லாம் ஒரு சாண் வயிற்றுக்காக நான் இதனை ஒரு ஆராய்ச்சிக்காக எடுத்துக்கொண்டு ஜெயித்தால் ஒரு அடியை வாங்கிக் கொண்டு அவன் காசை வாங்கி சாப்பிட்டு விடுவேன் நீங்க என்ன பண்ணுவீங்க சீசன் முடிஞ்சா ஒன்னுமே புரியல உலகத்துல இதுதான் பெட்டரா என்னடா பயன்படுத்துகிறீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement