ஆம்பளனா ஆம்பள கூட சண்டை போடணும்.! கவினை வெளுத்து வாங்கிய போட்டியாளர்.!

0
13220
kavin
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று மதுமிதா வெளியேற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக மதுமிதாவிற்கும் ஆண்கள் அணிக்கும் அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்தது. இதனால் நேற்று மனமுடைந்து மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

தற்போது மதுமிதா வெளியேறியதற்கு முக்கிய காரணமே கவின் மற்றும் அவர்களது கேங்க் தான் சென்று வலைதளத்தில் நெட்டிசன்கள் கிழித்தெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய சாக்க்ஷி அளித்த பேட்டியில் கவின் குறித்து கிழித்தெடுத்துள்ளார்.

இதையும் பாருங்க : வம்படியாக வெளியேறிய மது.! அப்போ அபிராமி நிலைமை என்ன.! இதோ அடுத்த அப்டேட்.! 

- Advertisement -

ஆரம்பத்தில் கவினுடன் நெருக்கம் காட்டி வந்த சாக்க்ஷி அதன்பின்னர் அவர் லாஸ்லியாவிடம் நெருக்கம் காண்பித்ததால் கொஞ்சம் கவின் மீது கோபம் கொண்டார். இருப்பினும் இப்படி கவின் சாக்க்ஷி லாஸ்லியா ஆகிய மூவரின் முக்கோண காதல் ஒரு சில வாரங்கள் ஓடிக்கொண்டுதான் இருந்தது. இறுதியில் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் சேர்ந்து சாட்சியை ஓரம் கட்டி விட்டனர்

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் முதன் முறையாக பேட்டியளித்துள்ள சாக்க்ஷியிடம் கவின் குறித்து கேட்கப்பட்டபோது,  கவின் பெண்களை வைத்தே கேம் ஆடுகிறார். அவர் ஆண்களுடன் ஏன் கேம் விளையாடவே இல்லை. ஏன்னா, பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். இதுவரை அவர் ஆண்களை நாமினேட் கூட செய்தது இல்லை. உங்களுக்கு சமமான ஆண்கள் கூட விளையாடுங்க. ஜெய்ச்சு நிரூபிங்க என்று கூறியுள்ளார் சாக்க்ஷி.  

-விளம்பரம்-
Advertisement