வம்படியாக வெளியேறிய மது.! அப்போ அபிராமி நிலைமை என்ன.! இதோ அடுத்த அப்டேட்.!

0
17248
Madhu

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில் வராத முகென் முதன் முறையாக நாமினேஷனில் இடம்பெற்றிருந்தார். இந்த நிலையில் மதுமிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

பிக் பாஸ்சின் இரண்டு சீசன் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் தான் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வனிதாவை முகென் அறைந்துவிட்டார் என்ற வதந்தி பரவிய நிலையில் நேற்று மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக ஒரு செய்தி வைரலாகி வந்தது.

இதையும் பாருங்க : வெளியேறினார் மது.! தற்கொலை முயற்சி உண்மையா.! ஷாக்கிங் ப்ரோமோ இதோ.!

- Advertisement -

இந்த நிலையில் மதுமிதா தற்கொலைக்கு முயன்று இருப்பது முதல் ப்ரோமோ மூலம் உறுதியானது. இது ஒருபுறம் இருக்க கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த ஓட்டிங்கில் அபிராமி தான் மிகவும் குறைவான வாக்குகளை பெற்று வந்தார். மேலும், பல்வேறு இணையத்தளத்தில் நடத்தப்பட்டு வரும் ஓட்டிங்கிலும் அபிராமிக்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் விழுந்து வந்தன.

This image has an empty alt attribute; its file name is image-97.png

இந்த நிலையில் இன்று மதுமிதா வெளியேறியதால் அபிராமி வெளியேற்றபடுவாரா இல்லையா சந்தேகம் நிலவியது. ஆனால், தற்போது வந்த தகவலின்படி அபிராமி வெளியேற்றபட்டதாக கூறப்படுகிறது. எனவே, கடந்த வாரத்தை போல இந்த வாரமும் இரண்டு நபர்கள் வெளியேறியுள்ளனர்.

-விளம்பரம்-

Advertisement