யார் கிண்டல் செய்தாலும் கவினை வம்பிழுக்கும் சாக்க்ஷி. கடுப்பில் கவின் ஆர்மி.

0
26674
sakshi
- Advertisement -

சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி திருவிழா போன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு முடிவடைந்தது. மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட தூள் கிளப்பியது. மேலும் ,பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் முகென் ஆனார். அதோடு இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்துள்ளார்கள். மேலும் சமூக வலைதளங்களில் சமூகவலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் அதிகமாக பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி குறித்து தான் பேசப்பட்டு வருகிறது. அதில் மோகன் வைத்தியா மற்றும் பாத்திமா அவர்கள் கொஞ்சம் விலகி உள்ளார்கள். அதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவுடன் சாக்சியும், அபிராமியும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கருத்துக்களை மாற்றி மாற்றி பதிவு விட்டு வந்தார்கள்

-விளம்பரம்-

பிறகு இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு எழ தொடங்கியது. அதுவும் கொஞ்ச காலங்களில் பயங்கர சண்டை ஆகவே போனது கூட சொல்லலாம். நடிகை சாக்ஷி அகர்வால் ரஜினியின் ‘காலா’, அஜித்தின் ‘விசுவாசம்’ போன்ற திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் காதல் கலவரங்களை உருவாக்கியதில் அதிக பங்கு வகித்தவர் நடிகை சாக்ஷி அகர்வால் என்று சொல்லலாம்.
பின் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகை சாக்ஸிக்கு நிறைய ரசிகர்கள் சேர்ந்தார்கள். அதிலும் ரசிகர் ஒருவர் சாக்ஷியின் உருவத்தை வரைந்து அவருக்கு பரிசாக அளித்துள்ளார். இது குறித்து சாக்ஸி அவருக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.

இதையும் பாருங்க : விஜய் மற்றும் ஏ ஆர் ரஹ்மானுடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய இந்துஜா. வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

மேலும்,நடிகை சாக்ஷி அகர்வால் அந்த ரசிகருடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சாக்ஷிக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். நடிகை சாக்ஸி பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்த போது சரவணன் மீனாட்சி கவினும்,நடிகை ஷெரினும் நெருங்கிய நண்பனாக தான் பழகி வந்தார்கள். பின்னர் சாக்ஷிக்கும்,கவினுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. ஆனால், திடீரென்று கவின் நான் உன்னை காதலிக்கவில்லை,உன்னிடம் நல்ல நண்பராக தான் பழகுகிறேன் என்று கூறினார். ஆனால், சாக்ஷி மனமுடைந்து,கவின் உணர்ச்சிகளால் என்னை காயப்படுத்தி விட்டான் என பயங்கர கலவரத்தையே பிக்பாஸ் வீட்டில் ஏற்படுத்தினார்.

ஆனால், சமீபத்தில் சாக்க்ஷியின் புகைப்படத்தை சிலர் கிண்டலடித்து கமன்ட் செய்தனர். அதற்கு சாக்க்ஷியோ கவின் ஆர்மியை மறைமுகமாக திட்டி தீர்த்து கமன்ட் செய்து வருகிறார். மேலும், நடிகை சாக்ஷி பிக் பாஸ் வீட்டில் 50 நாட்களுக்கு மேல் இருந்திருப்பார். அதுக்குள்ளேயே மழை பெய்து ஓய்ந்தது போல் இருந்தது. சாக்ஷியும், கவினும் ஒருவருக்கு ஒருவர் பேசி கொள்வதில்லை. பின்னர் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை எல்லாம் அனைவருக்கும் தெரிந்தது தான். மேலும்,சாக்ஷி குறித்து பல விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்த வண்ணம் இருந்தன. தற்போது தான் அமைதியாக உள்ளது.இதனை தொடர்ந்து நடிகை சாக்ஷி அவர்களுக்கு சினிமா துறையில் இருந்து பல பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும், அவர் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதாகவும் தகவல் வந்துள்ளன.

-விளம்பரம்-
Advertisement