விஜய் மற்றும் ஏ ஆர் ரஹ்மானுடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய இந்துஜா. வைரலாகும் புகைப்படம்.

0
5468
indhuja

தமிழ் சினிமா துறை நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவந்த ‘மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை இந்துஜா. இவர் தற்போது தளபதி விஜய் அவர்களின் 63வது படமான “பிகில்” படத்தில் நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். மேலும், விஜய்யின் பிகில் படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25 அன்று தமிழக முழுவதும் உள்ள திரையரங்கங்களில் வெளியானது. இதனை தொடர்ந்து பிகில் படம் குறித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும், அதிக வசூலையும் பெற்று வருகிறது. அது மட்டுமில்லாமல் பிகில் படம் வெளியாகி நான்கு நாட்களிலேயே 200 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியது என்ற தகவலும் வெளிவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிகில் படத்தில் கால்பந்து விளையாட்டு வீராங்கனையாக நடிகை இந்துஜா அவர்கள் நடித்துள்ளார்.

இவருடைய உண்மையான பெயர் ஹிந்துஜா ரவிச்சந்திரன். மேலும், திரை உலகில் அவர் ‘இந்துஜா’ என பெயரை மாற்றிக் கொண்டார். இவர் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர். மேயாத மான் படத்தில் வைபவ் இன் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை இந்துஜா. இதனை தொடர்ந்து அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்துள்ள ‘மெர்குரி’ படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் வெளியான ஆர்யாவிற்கு ஜோடியாக ‘மகா முனி’ படத்தில் நடித்து அசத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் விஜயின் பிகில் படத்திலும் நடித்துள்ளார். இப்படி திரை உலகில் தொடர்ந்து கலக்கிக் கொண்டிருக்கும் போது நடிகை இந்துஜா பிறந்த நாள் குறித்து சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் வந்துள்ளன. மேலும், அவருக்கு ஆகஸ்ட் 1-ஆம் தேதியன்று பிறந்த நாள்.

இதையும் பாருங்க : ஒரே நாளில் கவினுக்கு எதிராக நடக்கும் இத்தனை சதி. குழப்பத்தில் கவின் ஆர்மி.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் அப்போது பிகில் பட குழுவினர் அனைவரும் சேர்ந்து இந்துஜாவின் பிறந்த நாளை சிறப்பாகவும்,சந்தோஷமாகவும் கொண்டாடி வந்துள்ளார்கள். மேலும், நடிகை இந்துஜா அவர்கள் தளபதி விஜய் அவர்களுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்துள்ளார். மேலும், இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கும் கேக் கொடுத்து தன்னுடைய பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வந்துள்ளார்கள். இதனைத்தொடர்ந்து இந்துஜா அவர்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்தை பிகில் பட குழுவினர் உடன் சந்தோசமாக கொண்டாடி உள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்துஜா பிறந்த நாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் தற்போது தான் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும், நடிகை இந்துஜா அவர்கள் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ‘இந்துஜா பிறந்த நாள் முடிந்ததா!!என வருத்தத்தில் கருத்துக்களை இணையங்களில் பதிவு இட்டு வந்தார்கள்.மேலும்,அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதோடு நடிகை இந்துஜா பிகில் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் கூட இந்துஜா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அதை பார்த்த நடிகை மஹிமா நம்பியார் அவர்கள் ‘திருமணம் செய்து கொள்ளலாமா’? என வேடிக்கையாக பிரபோஸ் செய்துள்ளார். அதற்கு அவரும் ஓகே சொல்லிவிட்டார். இந்த நியூஸ் தான் சமீபத்தில் பயங்கரமாக ட்ரெண்டிங் இருந்தது.

Advertisement