பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ரசிகர்கள் அனைவராலும் பலரும் வெறுக்கப்பட்டு வருபவர் சாக்க்ஷி தான். பிக் பாஸ் வீட்டினுள் பல சில்மிஷ வேலைகளை செய்து போட்டியாளர்கள் மத்தியில் பல சண்டைகளை ஏற்படுத்தி வருகிறார் சாக்க்ஷி.
வட மாநிலத்தைச் சேர்ந்த இவர் சிறுவயது முதலே மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அதன் பின்னர் பல்வேறு தொலைக்காட்சி விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு முதன்முறையாக கன்னடத்தில் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இவர் தமிழில் முதன் முதலில் அறிமுகமானது அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் தான்.அந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சாக்ஷி.
இதையும் பாருங்க : பிகில் படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தான்.!
அதன் பின்னர் தமிழில் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தார். மேலும், அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த விசுவாசம் படத்திலும் நயன்தாராவுடன் பணியாற்றும் மருத்துவராக நடித்து இருந்தார். தற்போது நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 10 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளதால் போட்டியாளர்களை பற்றிய பெரிய அபிப்பிராயம் யாருக்கும் ஏற்படவில்லை . இருப்பினும் சாக்ஷி அகர்வாலுக்கு ஒரு ஆர்மிகளும் தற்போது சமூகவலைதளத்தில் ரசிகர்கள் துவங்கியுள்ளன. இந்த நிலையில் சாக்க்ஷி அகர்வாலின் பழைய புகைப்படம் ஒன்று சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.