ட்ரெஸ் மாத்தர மாதிரி பொண்ணுங்கள மாத்தறவன் நீ.! கவின் குறித்து வீடியோ வெளியிட்ட சாக்க்ஷி.!

0
9706
kavin
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சாக்க்ஷி கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை இவர் போட்டியாளர்கள் பற்றி புறம் பேசிகொண்டே இருந்ததால் ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்ட்டு வந்தார். இருப்பினும் ஒவ்வொரு வாரமாக எப்படியோ எலிமினேஷனிலிருந்து தப்பித்து கொண்டே வந்தார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is sakshi-6-1024x576.jpg

ஆரம்பத்தில் கவினுடன் நெருக்கம் காட்டி வந்த சாக்க்ஷி அதன்பின்னர் அவர் லாஸ்லியாவிடம் நெருக்கம் காண்பித்ததால் கொஞ்சம் கவின் மீது கோபம் கொண்டார். இருப்பினும் இப்படி கவின் சாக்க்ஷி லாஸ்லியா ஆகிய மூவரின் முக்கோண காதல் ஒரு சில வாரங்கள் ஓடிக்கொண்டுதான் இருந்தது. இறுதியில் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் சேர்ந்து சாக்க்ஷி ஓரம் கட்டி விட்டனர்.

இதையும் பாருங்க : பிரபல நடிகருடன் நமிதாவிற்கு இரண்டாம் திருமணம்? அந்த நடிகரே சொன்ன பதில்.! 

- Advertisement -

இந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் ஒரு டாஸ்கின் போது கவினிடம் சாக்க்ஷி குறித்து வனிதா கேட்டார். அப்போது பேசிய கவின், சாக்க்ஷியிடன் நான் நெருக்கமாக பழகியது உண்மை தான் என்றும் கூறியிருந்தார். மேலும், சாக்க்ஷி தன்னை காலி செய்ய நினைத்ததால் அவரிடம் இருந்து விலகி விட்டேன் என்று கூறியிருந்தார் கவின்.

இந்த நிலையில் கவின் நேற்றய நிகழ்ச்சியில் தன்னை பற்றி பேசியதால் கடுப்பான சாக்க்ஷி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கவினுக்கு மூன்று கேள்விகளை முன்வைத்துள்ளார் சாக்க்ஷி. மேலும், கவினை, பொண்ணுங்கள டிரஸ் மாத்தற மாதிரி கவின் மாத்திட்டு போவியா கவின் என்றும் பேசியுள்ளார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement