பிரபல நடிகருடன் நமிதாவிற்கு இரண்டாம் திருமணம்? அந்த நடிகரே சொன்ன பதில்.!

0
51909
namitha
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார் நடிகை நமிதா. தமிழ் மட்டுமல்லாது தெலுகு, மலையாளம், கன்னடன் என்று பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் நமிதா. மேலும், கடந்த 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணமும் செய்து கொண்டார்.

-விளம்பரம்-
Image result for namitha husband

சில வருடங்களாக அவர் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பின் அவரது மார்க்கெட் லேசாக உயர்ந்தது இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகரான சரத் பாபுவை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெலுங்கு சினிமாவில் ஒரு செய்து வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பாருங்க : இது தான் ஓப்பந்தம்.! முதன் முறையாக போட்டியாளர்களின் சம்பளம் குறித்து ரகசியத்தை உடைத்த சாக்க்ஷி.! 

- Advertisement -

நடிகர் சரத்பாபுவும் நடிகை நமீதாவும் கடந்த சில வருடங்களாக லிவிங் டு கெதர் வாழ்க்கையை கடைப்பிடித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்தச் செய்தி குறித்து நமீதா தரப்பில் மறுப்பு அளிக்கப்படாமல் இருந்தது. சில பத்திரிகை தரப்பில் அவரை விளக்கம் கேட்டதற்கு, ‘ஏன் உங்களுக்கு இப்படிப்பட்ட கேவலமான சந்தேகங்கள் எல்லாம் வருகிறது?’ எனக் கேட்டதாக தகவல் வெளியானது.

Image result for namitha sarath babu

இந்த விவகாரம் குறித்து நடிகர் சரத்பாபு, ‘கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் அவருடன் படத்தில் நடிக்கத் தொடங்கியதிலிருந்தே இந்த மாதிரியான வதந்திகள் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன. இது எனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது’ என்று கூறியுள்ளார். மேலும் ‘நமீதாவை நான் பார்த்தே ரெண்டு வருடங்களாகிவிட்டது. இனிமேலும் அவருடன் என்னை இணைத்துப் பேசுவது இருவரையும் பாதிக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்’ என அவர் கூறியிருக்கிறார்

-விளம்பரம்-
Advertisement