தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தி, தெலுகு, மலையாளம் என்று பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அதிகபட்சமாக இந்தியில் தான் 12 சீனை நெருங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் 12 வது சீசன் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி துவங்கியது.

Advertisement

இந்த 12 வது சீசனை பாலிவுட் நடிகர் சால்மான் கான் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இவர் ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் 8 சீசன்களை தொகுத்து வழங்கி இருக்கிறார். ஆனால், இந்த சீசனை பாலிவுட் நடிகர் ஷாருகான் தான் தொகுத்து வழங்குவதாக இருந்துள்ளது .பாலிவுட்டில் முன்னணி நடிகராக விளங்கி வரும் சல்மான் எதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்குகிறார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்காக சல்மான் கானிற்கு வழங்கபடும் சம்பளம் தான்.

வாரத்தில் வெறும் இரண்டு நாள் மட்டுமே சல்மான் பங்குபெறும் நிகழ்ச்சிக்கு அவருக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து 300 முதல் 350 கோடி வரை சல்மான் சம்பாதித்துள்ளார்.

Advertisement

Advertisement

கடந்த 8 சீசன்களில் சல்மான் கான் பெற்ற சம்பளத்தின் விவரம்:

* 4 வது சீசன் – ரூ 2.5 கோடி

* 6 வது சீசன் – ரூ.2.5 கோடி

* 7 வது சீசன் – ரூ. 5 கோடி

* 8 வது சீசன் – ரூ. 5.5 கோடி

* 9 வது சீசன் – ரூ. 8 கோடி

* 10 வது சீசன் – ரூ. 10 கோடி

* 11 வது சீசன் – ரூ. 11 கோடி

* 12 வது சீசன் – ரூ. 15 முதல் 20 கோடி

Advertisement