அட, சம்யுக்தாவும் ஒரு நடிகை தானா. சன் டிவியின் இந்த தொடரில் நடித்துள்ளார்.

0
4182
samyuktha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் சம்யுக்தா குறித்து ட்வீட் போட்டுள்ளார் நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான ஐஸ்வர்யா. தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். ரியோ, ரேகா, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், ஜித்தன் ரமேஷ்,ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், வேல்முருகன் என்று பல பரிட்சயமான போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் ஒரு சில புது முகங்கள் கூட கலந்து கொண்டு இருந்தனர்.அந்த வகையில் சம்யுக்தாவும் ஒருவர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-40.jpg

பிக் பாஸில் இவரை பற்றி இவர் சொன்னது. நான் படிச்சது இன்ஜினியரிங். கார்ப்பரேட்டில் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் அதே நேரத்தில் மாடலிங் செய்ய வேண்டும் என்கிற ஆசை இருந்துகொண்டே இருக்கும். அது போல தான் மிஸ் சென்னை டைட்டில் ஜெயித்தேன். அதனால் மாடலிங், நடனம் ஆகியவற்றின் மீது ஈர்ப்பு எப்போதுமே இருந்திருக்கிறது. என் மகனுக்கு 4 வயது ஆகிறது. அவன் பிறந்து ஆறு மாதத்திலேயே நான் ரேம்ப் வாக் செய்ய வந்துவிட்டேன்.மேலும் இரண்டு பிஸ்னஸ் நடத்தி வருகிறேன். சோசியல் மீடியா influencer ஆக இருக்கிறேன். நான் ஒரு ஃபிட் மாம்.

- Advertisement -

என்னை போன்று இருப்பவர்களுக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருக்க விரும்புகிறேன். பிக் பாஸ் வாய்ப்பை நான் மிஸ் செய்ய விரும்பவில்லை என்று கூறி இருந்தார். இன்ஜினியரிங் முடித்துவிட்டு கார்ப்பரேட்டில் பணியாற்றி இவர் மாடல் அழகியும் ஆவார். மேலும், இவர் மிஸ் சென்னை பட்டத்தை கூட ஜெயித்திருக்கிறார். மாடலிங் நடனம் போன்ற பல்வேறு விஷயங்களில் ஈர்ப்பு கொண்ட இவர் விஜய் டிவி தொகுப்பாளினியான பாவனாவின் நெருங்கிய தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது. சொல்லப்போனால் பாவனாவின் ரெகமெண்டேஷன் மூலமாகத்தான் இவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.

This image has an empty alt attribute; its file name is DoGUFYiUYAAbaGh.jpg

பாவனாவும் இவருக்கும் அடிக்கடி நடனமாடி பல வீடியோகளை கூட போட்டு இருக்கிறார் பாவனா என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல மாடல் அழகியான இவர் 2007 ஆம் ஆண்டு மிஸ் சென்னை அழகி போட்டியில் கலந்து கொண்டு இருக்கிறார். பல்வேறு விளம்பர படங்களில் கூட நடித்துள்ள இவர் 2018 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான ‘சந்திரகுமாரி’ தொடரில் நடித்துள்ளார். அந்த தொடரில் துர்கா என்ற கதாபத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால், இந்த தொடர் திடீரென்று நிறுத்தப்பட்டது.

-விளம்பரம்-
Advertisement