சம்யுக்தாவின் வளர்ப்பு பஞ்சாயத்து – குடியும் கூத்துமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த நெட்டிசன்கள்.

0
2394
samyuktha
- Advertisement -

சம்யுக்தாவின் ‘வளர்ப்பு’ பஞ்சாயத்து தான் தற்போது பெரும் சர்ச்சையாக சென்று கொண்டு இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். ரியோ, ரேகா, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், ஜித்தன் ரமேஷ்,ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், வேல்முருகன் என்று பல பரிட்சயமான போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் ஒரு சில புது முகங்கள் கூட கலந்து கொண்டு இருந்தனர்.அந்த வகையில் சம்யுக்தாவும் ஒருவர். மாடல் அழகியான இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார் அதே போல பல தொழில்களையும் செய்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் மிஸ் சென்னை பட்டத்தை கூட ஜெயித்திருக்கிறார். மாடலிங் நடனம் போன்ற பல்வேறு விஷயங்களில் ஈர்ப்பு கொண்ட இவர் விஜய் டிவி தொகுப்பாளினியான பாவனாவின் நெருங்கிய தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் சம்யுக்தா கொஞ்சம் நடுநிலையாக தான் இருந்த வந்தார். ஆனால், நாட்கள் செல்ல செல்ல இவர் பாலாஜி டீமில் இணைந்து விட்டார். அதிலும் சனம் ஷெட்டி மற்றும் பாலாஜி ‘தருதல’ பஞ்சாயத்தில் பாலாஜிக்கு ஆதரவாகத்தான் சம்யுக்தா பேசியிருந்தார். பாலாஜிக்கு யாரெல்லாம் பிடிக்காது அவரை சமைப்பதற்கும் பிடிக்காது என்பதை வெளிப்படையாகவே காட்டி வருகிறார்.

- Advertisement -

சனம் ஷெட்டி மட்டும் பாலாஜி பிரச்சினை ஏற்பட்ட பின்னர் சம்யுக்தா சனம் ஷெட்டியிடம் அடிக்கடி ஏதாவது ஒரு சண்டையை போட்டு வருகிறார்.இப்படி ஒரு நிலையில் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் கால் சென்டரில் மற்ற போட்டியாளர்கள் தங்களுக்குத் தோன்றும் கேள்விகளை கேட்டுவந்தனர். அந்த வகையில் நேற்று வெளியான ப்ரோமோ ஒன்றில் சம்யுக்தாவிற்கு சனம் ஷெட்டி கால் செய்துபேசி இருந்தார். அப்போது சம்யுக்தா நீங்கள் பார்ப்பதற்கு தான் அழகாக இருக்கிறீர்கள் ஆனால் வாயை திறந்தாலே கலீஜ் என்று கூறி இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த சனம், நம்ம புத்தியில் கலீஜ் இருந்தால் தான் அந்த வார்தை வரும் என்று கூறி இருந்தார். மேலும், சனம் ஷெட்டி, மத்தவங்களுக்கு நான் கேப்டன் ஆனது அவ்வளவு வெறுப்பு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை என்று கூறிய சம்யுக்தா, அதற்கு என்ன காரணம் என்று சனம் கேட்டதற்கு அது அவங்களோட வளர்ப்பு என்று கூறி இருந்தார். இந்த விஷயம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவ #Samyuktha ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் வந்தது அதில் பலரும் சம்யுக்தாவிற்கு எதிராக ட்வீட்களை பகிர்ந்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் சம்யுக்தா, நண்பர்களுடன் குடியும் கூத்துமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதனை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து இதுக்கு பேர் தான் வளர்ப்பா என்று சம்யுக்தாவை கழுவி ஊற்றி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement