‘பிக் பாஸ் அல்டிமேட்க்கு போகாதீங்க’ – ரசிகரின் அன்பு கட்டளைக்கு சனம் ஷெட்டி சொன்ன பதிலை பாருங்க.

0
353
sanam
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்துகொண்டனர் அதில் சனம் ஷெட்டியும் ஒருவர் தான். தமிழில் அம்புலி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பிற மொழி படங்களில் நடித்து உள்ளார். இருந்தாலும் இவர் மக்கள் மத்தியில் தெரிய ஆரம்பித்தது என்னவோ பிக் பாஸ் 3 போட்டியாளர் தர்ஷன் விவகாரத்தில் தான். தனக்கும் தர்ஷனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்ததாக சனம் ஷெட்டி புகார் அளித்து இருந்தார். இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. பின் இவரே பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து இருந்தார்.

-விளம்பரம்-
sanam

இதில் சனம் திறைமையாக தான் விளையாடி வந்தார். இருந்தும் சனம் ஷெட்டியின் வெளியேற்றம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பிக் பாஸ்க்கு பிறகு சனம் சனம் ஷெட்டி சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். தற்போது இவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்நிலையில் சனம் செட்டி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது குறித்து பிக்பாஸ் ரசிகர் ஒருவர், நீங்கள் ஏன் இந்த நிகழ்ச்சியிக்கு போகணும், போகாதீர்கள் என்று சொல்லி இருக்கிறார்.

- Advertisement -

சனம் செட்டி ட்விட்:

அதற்கு பதிலளிக்கும் வகையில் சனம் செட்டி ட்விட்டரில் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி ஆனால் விஜய் டிவி தான் எனக்கு மிகவும் தேவைப்படும் நேரத்தில் ஒரு மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்தது மேலும் என்னை உங்களுக்கு எல்லாம் அறிமுகம் செய்து வைத்தது இது போதும் எனக்கு நான் என்றென்றும் விஜய் டிவிக்கும் ரசிகர்களுக்கும் கடமைப்பட்டிருக்கிறேன் பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டுள்ளார். இப்படி இவரின் பதிவு தற்போது சோசியல் மீடியாவில்
வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி:

கடந்த ஆண்டு ஒளிபரப்பட்ட பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக சில தினங்களுக்கு முன் தான் முடிவடிந்தது. இதுவரை இல்லாத பல மாற்றங்களை இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொண்டு வந்திருந்தார்கள். ஆரம்பத்திலேயே நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களை களமிறக்கி இருந்தார்கள். பல போட்டிகள், சவால்கள் உடன் நிகழ்ச்சி நடைபெற்று இருந்தது. மேலும், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே ஞாயிற்று கிழமை ப்ரம்மாண்டமாக நடந்தது. இதில் ராஜு டைட்டில் வின்னர் ஆனார். பிரியங்கா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். மூன்றாம் இடத்தை பவானி ரெட்டியும், நான்காம் இடத்தை அமீர் பிடித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து இருப்பதால் பிக் பாஸ் ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் ரசிகர்களுக்காக மீண்டும் ஒரு புது வகையான பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்க இருக்கிறது. மேலும், தமிழில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் தமிழ் பிக் பாஸில் 1 முதல் 5 சீசன் வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு பிக் பாஸ் அல்டிமேட் என்று பெயர் வைத்து உள்ளார்கள்.

This image has an empty alt attribute; its file name is 2-61-716x1024.jpg

கலந்து கொள்ளும் பிற போட்டியாளர்கள்:

அதோடு இந்த நிகழ்ச்சியின் புரோமோ கூட வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் வனிதா, பரணி, ஜூலி, சுரேஷ் சக்ரவர்த்தி, சினேகன், அபிராமி, சுஜா வருணி, ஷாரிக், தாடி பாலாஜி, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், ஷெரின் என பல பேர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இன்னும் இது எப்போ ஒளிபரப்ப போகிறார்கள்? என்ற தகவல் வெளியாகவில்லை. இதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

Advertisement