சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியவரை போலீசார் கைது செய்து உள்ளார்கள். தமிழில் அம்புலி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சனம் ஷெட்டி. அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று எண்ணெற்ற படங்களில் நடித்து உள்ளார். ஆனால், இவர் வெளியில் தெரிய ஆரம்பித்தது என்னவோ பிக் பாஸ் 3 போட்டியாளர் தர்ஷன் விவகாரத்தில் தான். தர்ஷனுடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்ததாக சனம் ஷெட்டி புகார் அளித்து இருந்தார்.
இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் சனம். மற்ற போட்டியாளர்களின் வெளியேற்றத்தை சனம் ஷெட்டியின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே சனம் ஷெட்டியை விட நிஷா, ஷிவானி, ஆஜித் போன்றவர்கள் எந்த விதத்தில் சிறந்த போட்டியாளர்களாக இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் சென்னை திருவான்மியூரில் வசித்து வரும் சனம் ஷெட்டி இன்ஸ்டாகிராமில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனக்கு ஆபாசமான மெசேஜ்களை அனுப்பி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்து இருந்தார். புகாரை பெற்றுக்கொண்ட திருவான்மியூர் போலீசார், அதை சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைத்து இருந்தார்.
மேலும், சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் செய்தது யார் என்று IP அட்ரஸ் மூலமாக போலீசார் விசாரணையை தொடங்கினர். இதனையடுத்து இது தொடர்பாக அடையாறு சைபர் கிரைம் போலீசார் அந்த வாட்ஸ்-ஆப் எண் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்து விசாரணையைத் துவங்கிய நிலையில் விசாரணையில், நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பியவர் திருச்சியை சேர்ந்த ராய் என்ற கல்லூரி மாணவன் என்று தெரியவந்துள்ளது. கல்லூரி மாணவனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.