அச்சு அசலாக குந்தவையாக மாறிய பிக்பாஸ் 4 நடிகை – திரிஷா என்ன செய்துள்ளார் பாருங்க.

0
545
- Advertisement -

அச்சு அச்சலாக குந்தவையாக மாறிய பிக் பாஸ் நடிகைக்கு திரிஷா பாராட்டு தெரிவித்து இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார். இந்த கதையை பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், இந்த கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரகுமான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பொன்னியின் செல்வன் படம் சில இருந்த முன் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. மேலும், தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி வருகின்றனர். படம் வெளியாகி ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என அனைவரும் மத்தியிலும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

படத்தின் வசூல்:

அதோடு படம் வெளியாகி மூன்று நாட்களில் 200 கோடிக்கு மேல் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்தே பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் குந்தவை – நந்தினி கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தி அதை சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பிக் பாஸ் நடிகை சனம் செட்டியும் குந்தவை கெட்டபில் போட்டோஷூட் நடத்தி இருக்கிறார்.

-விளம்பரம்-

குந்தவை கெட்டப்பில் பிக் பாஸ் நடிகை:

இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். தற்போது இவர் குந்தவை கெட்டப்பில் போட்டோ சூட் நடத்தி சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். அதில் அவர் பார்ப்பதற்கு திரிஷா போன்றே இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் லைக்ஸ்குகளை குவித்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரியல் குந்தவை திரிஷாவே பாராட்டி நன்றியை தெரிவித்ததாகவும் சனம் செட்டி கூறியிருக்கிறார்.

Advertisement