பிக் பாஸ் வீட்டில் எலியும் பூனையுமாக இருக்கும் சனம் – பாலாஜி இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் எடுத்த புகைப்படம்.

0
1153
balaji

கடந்த சில தினங்களாக சனம் மற்றும் பாலாஜி பற்றிய விவகாரம் தான் மிகவும் சர்ச்சையான விவாதமாக சென்று கொண்டு இருக்கிறது. சனம் ஷெட்டியை, பாலாஜி ‘அட்ஜஸ்ட்மென்ட் / காம்ப்ரமைஸ்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி அசிங்கப்படுதியாக சனம் ஷெட்டி புகார் எழுதி இருந்ததை அடுத்து பாலாஜிக்கு எதிராக பல எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. கடந்த 10ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி மற்றும் பாலாஜி முருகதாஸ் பேசிக்கொண்டிருக்கையில் பாலாஜி முருகதாஸ் நான் ஒரு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சவுத் இந்தியா என்ற பெயரில் pageant ஒன்றை நடத்தினேன் என்று கூறினார் அதற்கு சனம் செட்டி எப்போது என்று கேட்டதற்கு பாலாஜி முருகதாஸ் இது உங்களுடையது மாதிரி டுபாக்கூர் கிடையாது என்று கூறினார்.

உங்களுடைய நிகழ்ச்சிகளில் எல்லாம் யாரும் இன்டர்நேஷனல் லெவலுக்கு செல்ல முடியாது என்று பாலாஜி முருகதாஸ் கூறினார். அதற்கு சனம் செட்டி ஏன் முடியாது என்று கேட்டார். பின்னர் இந்த பிரச்சனையை விட்டு விட்டு பாலாஜி முருகதாஸ் தன்னுடைய சாதனைகளைப் பற்றி கூறி வந்தார்.இதனால் கொஞ்சம் மன வருத்தம் அடைந்த சனம் செட்டி அந்த இடத்திலிருந்து வந்துவிட்டால் அதன் பின்னர் பாலாஜி முருகதாஸை தனியாக அழைத்து சனம் செட்டி பேசுகையில் நீங்கள் டுபாக்கூர் நிகழ்ச்சி என்று சொன்னது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று சனம் செட்டி கூறி இதற்கு நீங்கள் அந்த இடத்தில் இருந்தது எனக்கு தெரியாது என்று கூறினார் பாலாஜி.

- Advertisement -

மேலும் இதை நான் உங்களை குறிப்பிட்டு சொல்லவில்லை என்றும் கூறினார் அதன் பின்னரும் இது ஒரு டுபாக்கூர் தான் என்பதை நான் வெளியில் வந்து நிரூபிக்கிறேன் என்று சவால் விட்டார் பாலாஜி.நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி இருந்தது. போட்டியாளர்கள் அனைவரும் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் யாரிடம் பிரச்சனை இருக்கிறதோ அதனை புகாராக எழுத வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்து இருந்தார்.பாலாஜி மற்றும் சனம் ஆகி இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டி புகார்களை எழுதினர். ஆனால், அந்த ப்ரோமோவை நீக்கியது விஜய் டிவி.சனம் ஷெட்டி எழுதிய கடிதத்தில் பாலாஜி,நான் டைட்டில் வின்னராக இருக்கும் பியூட்டி பேஜன்டுக்கு எதிராக அட்ஜஸ்ட்டமென்ட் மற்றும் காம்ப்ரமைஸ் என்ற வார்த்தையை பயன்டுத்தியதாகவும்.

யாரோ ஒரு மூன்றாம் நபர் சொன்ன ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்னுடைய நேர்மைக்கு களங்கம் என்று குறிப்பிட்டு இருந்தார். ப்ரோமோவை நீக்கியது மட்டுமல்லாமல் அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கூட சனம் எழுதிய புகார் கட்டப்படவில்லை. இப்படி பிக் பாஸ் வீட்டில் எலியும் பூனையுமாக இருக்கும் சனம் – பாலாஜி இருவரும் படு நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement