இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு பல்வேறு விருதுகளையும் குவித்தது. இந்தப் படத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு போன்ற பல்வேறு பரிட்சயமான நடிகர்கள் நடித்து இருந்தார்கள். அதேபோல இந்த படத்தில் ஒரு காட்சியில் வந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த பல நடிகர்கள் இருக்கின்றனர். அதில் மிகவும் முக்கியமான ஒருவர் பரியனின் தந்தையாக நடித்த தங்கராஜ்.இந்த படத்தில் கலைக் கூத்தடியாக வரும் இவர் கூத்துக்களில் பெண் வேடம் போட்டு ஆடுவதால் நிஜத்திலும் பெண்னை போன்ற நயனத்தை பெற்று இருப்பார்.
மேலும், இந்த படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்தும் இருப்பார். இதனால் இந்த பட விழாவில் இவரது காலில் விழுந்து வணங்கினார் இந்த படத்தில் ஆனந்தியின் தந்தையாக நடித்த நடிகர் மாரிமுத்து.இப்படி ஒரு நிலையில் நெல்லையில் வசித்து வரும் தங்கராஜ், சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக அவருடைய வீடு முற்றிலும் சேதம் அடைந்துவிட்டது. பரியேறும் பெருமாள் படத்திற்கு பின்னர் நடிகர் தங்கராஜுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை.65 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் தெருக்கூத்துகள் வேடம் கட்டி ஆடுவதையும் நிறுத்தி விட்டாராம்.
இதையும் பாருங்க : மன்னிப்பு கேட்க முடியாது – இது தான் உண்மையான வீடியோ. ஆதாரத்தை பகிர்ந்த ராஜலட்சுமி.
மேலும், இரண்டு மகள்களையும் படிக்க வைத்துவிட்ட இவர் குடும்ப கஷ்டம் காரணமாக மனைவியுடன் சேர்ந்து எலுமிச்சை, பனங்கிழங்கு போன்றவற்றை தன்னுடைய கிராமத்தில் விற்று பிழைத்து வந்து உள்ளனர்.ஆனால், தற்போது அந்த வியாபாரம் தொடங்க தற்போது ஒரு வேளை உணவுக்குக் கூட மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார் என்று செய்திகள் வைரலானது. இப்படி ஒரு நிலையில் இவரை தொடர்பு கொண்டு பேசியதாக சனம் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள சனம், தங்கராசு நண்பர் வள்ளியிடம் பேசினேன். தற்போதைக்கு மாரி செல்வராஜ், தங்கராஜிக்கு நிதியுதவியை செய்து வருகிறார் என்பதை உறுதிபடுத்திக்கொண்டார் என்று பதிவிட்டுள்ளார் சனம். இதுஒருபுரம் இருக்க நெல்லை கலெக்டர் தங்கராஜுக்கு குடிசைமாற்று தொகுப்பில் வீடு ஒன்றை வழங்கியுள்ளார்.அதுமட்டுமின்றி அவரது மகளுக்கு கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக பணி ஒன்றை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.