அவருக்கு வாக்களிக்காதவர் உள்ளங்களையெல்லாம் – ஜேம்ஸ் வசந்தன் போட்ட நெடு நீள பதிவு.

0
2028
sanam
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 63 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகியோர் வெளியேறி இருந்த நிலையில் நேற்று (டிசம்பர் 6) சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டு இருந்தார். கடந்த வாரம் இந்த வாரம் ஆஜீத், ஷிவானி, நிஷா, அனிதா ஆகிய யாரவது 4 பேரில் ஒருவர் தான் நிச்சயம் வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் பலரும் எதிர் பார்த்தனர். இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டு இருந்தார்.மற்ற போட்டியாளர்களின் வெளியேற்றத்தை சனம் ஷெட்டியின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணமே சனம் ஷெட்டியை விட நிஷா, ஷிவானி, ஆஜித் போன்றவர்கள் எந்த விதத்தில் சிறந்த போட்டியாளர்களாக இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. சனம் ஷெட்டி வெளியேறியதையடுத்து ட்விட்டரில் சனம் ஷெட்டி ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் கூட வந்தது. சனம் ஷெட்டி வெளியேறியதை தொடர்ந்து ரசிகர்கள் மட்டுமல்லாது பல்வேறு பிரபலங்கள் கூட தொடர்ந்து சனம் ஷெட்டிக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் பிரபல தொகுப்பாளரும் இசையமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் சனம் ஷெட்டி வெளியேற்றத்தை குறித்து பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

அவர் பதிவிட்டுள்ளதாவது,

சனம் வாக்களிப்பால் வெளியேறினாரா? திட்டமிட்டு அனுப்பப்பட்டாரா?
இது எல்லார் மனதிலும் எழுந்திருக்கிறக் கேள்வி!
பலருக்கு சந்தேகமே இல்லை.. இது சதிதான் என்று அடித்துச் சொல்கிறார்கள்.

-விளம்பரம்-

நான் பார்த்த, விசாரித்த, ஆய்வுசெய்த வகையில் அவருக்கு மக்களிடம் பெருத்த ஆதரவு இருக்கிறது என்பது மட்டும் தெளிவாகியது. பின் ஏன் அனுப்பப்பட்டார்? என்ன காரணம்? தயாரிப்பாளர்களுக்கு என்ன வியூகம், நோக்கம் என்பது விளங்கவில்லை.

https://www.facebook.com/JamesVasanthanMusician/posts/10223496710262044

ஆனால், அவர் எப்படி பெரும்பான்மை பார்வையாளர்களைக் கவர்ந்தார் என்பதுதான் என் கண்ணோட்டம்.

தொடக்கத்தில் நான் இந்நிகழ்ச்சியைப் பார்க்காததால் எனக்கு ஆரம்ப நிகழ்வுகள் தெரியாது. ஆனால் மக்களால் அவர் வெறுக்கப்பட்டார், சண்டைக்காரி என்கிற சாயல் அவர்மேல் படிந்தது என்பதை மட்டும் விளங்கிக்கொண்டேன்.

ஆனால் வாரங்கள் போகப்போக, அவருடைய நிலைப்பாடு மக்களுக்கு விளங்கத் தொடங்கியது.

  • நிலையான போக்கைக் கொண்டவராயிருந்தார்.
  • எத்தனை பேர் எதிர்த்து நின்றாலும், துணிவுடன் உறுதியாகத் தன் கருத்துகளை நிதானமாக வாதாடினார்.
  • வாதங்களில் தெளிவும், கண்ணியமும் இருந்தது. யாரையும் தவறான வார்த்தைகளில் பேசியதில்லை.
  • ஒரு குறிப்பிட்ட வாதத்தில், பாலாஜி மூர்க்கத்தனமாக நெருங்கி வந்து (ஆணென்கிற ஆணவத்துடன்) மிரட்டியபோதும் சற்றும் சளைக்காமல் அதே நிதானத்துடன் எதிர்கொண்டார்.
  • கடைசியாக நடந்த 1 – 13 இடங்களுக்கான வாதத்தின்போது கூட, வயதில் மூத்த இவரை பாலாஜி நீ, வா, போ என்று அழைக்க, இவர் இறுதிவரையில் பாலாஜியை நீங்க, வாங்க, போங்க என்றுதான் விவாதித்தார். Gabriela பாலாஜியை அவன், இவன் என்பதை நினைவில் கொள்ளவும்.
  • தேவையில்லாமல் மற்றவரைப் பகைத்துக்கொள்ளவேண்டாம் என்று (அங்கிருக்கிற சிலரைப் போல இல்லாமல்) ஒருபோதும் தன் கருத்துகளைப் பொது சர்ச்சைகளில் சொல்லாமல் இருந்ததில்லை. ஆனால் அமைதியாக வேறுபட்டார்.
  • அர்ச்சனா gang இவரை ஒட்டுமொத்தமாகக் குறிவைத்து விளையாடியபோதும் அசராமல் தனிப்புலியாகப் திரிந்தார்.
  • எல்லாவற்றுக்கும் சிகரமாக, வீட்டிலிருந்து வெளியேறியபோது அப்படி ஒரு முதிர்ச்சியுடனும், புன்சிரிப்புடனும் எல்லாருடனும் கலகலத்துவிட்டு நடந்தார்.
  • இதுவரை வெளியேறிய எல்லாரும் கமலுடன் மேடையில் நின்று ஒவ்வொருவரையும் பற்றிக் கருத்து சொல்லும்போது தங்கள் கோபத்தையும், வன்மத்தையும் காட்டியதுதான் வழக்கம். இவர் எல்லாரிலும் இருந்து வேறுபட்டு, தனித்துவத்துடன், ஏகப்பட்ட மனமுதிர்ச்சியுடன் அவர்களது நேர்மறைப் பக்கங்களைப் பாராட்டியும், எதிர்மறைப் பக்கங்களைப் பக்குவமாக எடுத்துச் சொல்லியும் உயர்ந்து நின்றார்.

அவருக்கு வாக்களிக்காதவர் உள்ளங்களையெல்லாம் நேற்றிரவு அள்ளிச்சென்றார்.

Advertisement