‘நமீதாக்கு நடந்தது’ – நமீதா மாரிமுத்து குறித்து முன்னாள் போட்டியாளர் சனம் சொன்ன விஷயம்.

0
6696
namitha
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நமிதா மாரிமுத்து வெளியேறியதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த 3 ஆம் தேதி மாலை கோலாகலமாக துவங்கியது.அதிலும் இந்த சீசனில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் இறக்கின்றனர். மேலும், தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதன் முறையாக இந்த சீசனில் முதல் திருநங்கையாக நமிதா மாரிமுத்து என்ற ஒரு திருநங்கை போட்டியாளரும் கலந்து கொண்டு இருந்தார்.

-விளம்பரம்-

இந்த வாரம் ஒவ்வொரு போட்டியாளரும் தாங்கள் கடந்து வந்த துயரங்களையும் கஷ்டங்களையும் சொல்லி வருகிறார்கள். அந்தவகையில் நமிதா மாரிமுத்து அவர்கள் தன் கதையை கூறியிருந்தார். அதில் அவர் சிறு வயதில் பட்ட கஷ்டங்கள், பெற்றோர்களால் அனுபவித்த கொடுமைகள் பற்றி எல்லாம் சொல்லி இருந்தது பலரையும் கண் கலங்க வைத்தது.

இதையும் பாருங்க : கண்மணி சீரியலில் குடும்ப குத்து விளக்காக இருந்த நடிகை – உள்ளாடை தெரியும் படு Transperant உடையில் கொடுத்த போஸ்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இவர் நேற்றய நிகழ்ச்சியில் இவர் சில தவிர்க்கமுடியாத காரணத்தால் வெளியேறி இருப்பதாக பிக் பாஸ் அறிவித்தார். நமிதா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர் ஒருவரிடம் சண்டையிட்டு வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் தூக்கி எறிந்து ரகளை செய்ததால் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிக் பாஸ் 4 போட்டியாளரான சனம், நமீதாவிற்கு தன் ஆதரவை தெரிவித்து உள்ளார்.

This image has an empty alt attribute; its file name is image-34.png

அதில் நமிதாவின் கதை தான் தனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அவங்க அனுபவிச்ச கஷ்டம் யாராலும் அனுபவிக்க முடியாது. அவங்களுக்கு இந்த பிக் பாஸ் மேடை ஒரு மிகப்பெரிய சாதனை தான். உலகம் முழுக்க இருக்க திருநங்கைளுக்கு ஒரு முன் உதாரணம் போல அவர்கள் பேசினார்கள். ரொம்ப பெருமையா இருக்கு, என்னால எவ்ளோ சப்போர்ட் பண்ண முடியுமோ பண்ணுவேன். அவருக்கு வாய்ப்பு கொடுத்ததற்காக பிக் பாஸ் டீமிற்கும், கமல் சாருக்கும் மிக்க நன்றி.

-விளம்பரம்-
Advertisement