எல்லாருக்கும் வாழ்த்துக்கள். ஆனால், இவங்க ஜெயிக்கட்டும் – நியாயமாக சொன்ன சனம்.

0
34072
sanam
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 10 வாரங்களை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம், ஜித்தன் ரமேஷ் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். இதில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் அதாவது டிம்பர் 6 ஆம் தேதி சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டு இருந்தார். சனம் ஷெட்டி நாமினேஷனில் இருந்த போது ஆரி, ஆஜீத், அனிதா, ரம்யா பாண்டியன், ஷிவானி, நிஷா, சனம் ஷெட்டி ஆகியோர் இடம்பெற்றனர். அதில் ஆஜீத், ஷிவானி, நிஷா, அனிதா ஆகிய யாரவது 4 பேரில் ஒருவர் தான் நிச்சயம் வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் பலரும் எதிர் பார்த்தனர்.

-விளம்பரம்-

ஆனால், எதிர்பாரத விதமாக சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டு இருந்தார். மற்ற போட்டியாளர்களின் வெளியேற்றத்தை சனம் ஷெட்டியின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே சனம் ஷெட்டியை விட நிஷா, ஷிவானி, ஆஜித் போன்றவர்கள் எந்த விதத்தில் சிறந்த போட்டியாளர்களாக இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. சனம் ஷெட்டி வெளியேறியதையடுத்து ட்விட்டரில் சனம் ஷெட்டி ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் கூட வந்தது.

இதையும் பாருங்க : அந்த ட்ரஸ்ல இருக்க போட்டோவ போடுங்க – விரும்பி கேட்ட ரசிகர்கள் – இன்ப அதிர்ச்சி கொடுத்த யாஷிகா.

- Advertisement -

சனம் ஷெட்டி வெளியேறிய பின்னர் சீக்ரெட் ரூமிலாவது வைக்கப்படுவாரா என்று எதிர்பார்க்கப்ட்டது. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை. சனம் ஷெட்டி வெளியேறிய பின்னர் ரசிகர்கள் போலவே பல்வேறு பிரபலங்கள் கூட சனம் ஷெட்டிக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதே போல சனம் ஷெட்டி வனிதாவை போல வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

sanam

இப்படி ஒரு நிலையில் சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டில் பயன்படுத்திய காபி கப்புடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, அந்த கப் இல்லனா என்ன இந்த கப் இருக்கே, பிக் பாஸில் நான் பயன்படுத்திய என்னுடைய சொந்த கப், ஏராளமான நினைவுகளை கொண்டு இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் என்னுடைய அணைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். தகுதியானவர் ஜெய்க்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement