கடந்த சில நாட்களாகவே கவின், லாஸ்லியா, சாக்க்ஷி பிரச்சனை தான் போய்க்கொண்டு இருகிறது. நேற்றைய நிகழ்ச்சியில் அனைவரையும் அழைத்து பேசிய லாஸ்லியா, இது அனைத்துக்கும் காரணம், சாக்க்ஷி பட்டதற்கும் நான் தான் காரணம். இனி யாரும் என்னிடம் பேசாதீர்கள் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
இந்த நிலையில் இந்த வாரம் டாஸ்கில் யார் சிறப்பாக செயல்பட்டார்கள், யார் மோசமாக செயல்பட்டார்கள் என்று போட்டியாளர்கள் கருத்து தெரிவித்த போது பெரும்பாலானோர் சேரன், ரஜினி போல செய்யவில்லை என்று கூறினார் சரவணன் ஆனால், அதை சேரன் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த பிரச்சனை பயங்கரமாக வெடித்தது.
இதையும் பாருங்க : தலைவர் பதிவிய ஏன் விட்டு கொடுத்தார் சாண்டி.! கிண்டலடித்தவருக்கு காஜலின் பதில்.!
இது ஒரு புறம் இருக்க இறுதியாக லாஸ்லியா மற்றும் ஷெரின் சிறைக்கு அனுப்பப்பட்டனர். அதற்கு முன்பாக கவினுக்கு அறிவுரை செய்து கொண்டிருந்த சாண்டி, இனி லாஸ் லியாகிட்ட நீ ரொம்ப பேசின அவ்வளவு தான் என்று எச்சரித்து கொண்டிருந்தார். ஆனால், அடுத்த சில நொடியே லாஸ்லியாவிடம் சென்ற கவின் அவருக்கு ஆறுதல் கூறினார்.
கவின் லாஸ்லியாவிடம் கையை இறுக்கி காண்பித்து முட்ட சொல்லி கூறினார். ஆனால், லாஸ்லியாவோ கவினின் கையை பிடித்து நான் இப்படி தான் பிடிப்பேன் என்று கூறினார். இதனை கண்ட சாண்டி, இவன் திருந்த மாட்டான் என்று சரவணனிடம் கூறினார்.
அதன் பின்னர் சிறையில் அழுது கொண்டிருந்த லாஸ்லியவை பார்த்து கவின் பீல் செய்து கொண்டிருந்தார். அப்போது கவின் அருகில் இருந்த சாண்டி இனிமே முன்னை போன்று ஜெயில் அருகில் அமர்ந்து கொண்டு லாஸ்லியாவிடம் பேசின அவ்ளோதான் என்று எச்சரித்தார். அதற்கு கவினும் இனிமேலே கண்டிப்பாக அப்படி நடக்காது என்று உறுதியாக சொன்னார்.
ஜெயிலில் இருந்த லாஸ்லியா அபிராமியிடம் அழுது கொண்டிருந்த லாஸ்லியவை கண்ட கவின், சாண்டியிடன் அபிராமியை அழைத்து லாஸ்லியா ஏன் அழுகிறார் என்று கேளுங்க என்று சொன்னார். அதற்கு சாண்டியோ நான் ஏன் கேட்க வேண்டும், சரி நீ போய் பேசு என்றார். அப்போது பேசிய லாஸ்லியா, எனக்கு உன்னோட பேசாமல் இருக்க முடியாது கவின் என்று கூறினார். நேற்று நடந்ததை வைத்து பார்க்கும் போது கவின் ஓரளவிற்கு தனது தவறை உணர்ந்தோ அல்லது சாண்டி என்ன சொல்லுவார் என்று நினைத்தோ மாறியதாக தான் தோன்றியது. ஆனால், தற்போது லாஸ்லியா தான் கவின் மீது அதிகபடியாக விழுந்து வருகிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது.