முன்னாள் மனைவி முன்னாள் இரண்டாம் மனைவியுடன் சாண்டி போட்ட ஆட்டம்.

0
185452
sandy-kajal
- Advertisement -

சினிமா திரை உலகில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி என்று சொன்னாலே போதும் எல்லாருக்குமே தெரியும்.சாண்டி மாஸ்டர் பத்தி சொல்லனும்னா…இவர் ஒரு இந்திய திரைப்பட நடன ஆசிரியர். இவர் சினிமா திரைப்படங்கள் மற்றும் பல நிகழ்ச்சிகளில் நடன ஆசிரியராகவும், பல மேடை நடனங்களையும் தொகுத்து வழங்கி வந்துள்ளார். அது மட்டும் இல்லைங்க இவர் சினிமா திரை உலகில் பிரபலமான நடன ஆசிரியர் என்று சொன்னால் கலா மாஸ்டரை சொல்லலாம். மேலும், சாண்டி கலா மாஸ்டரின் மாணவனாக தான் முதலில் அறிமுகமானார். பின்னர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் ஒரு ஜோடிக்கு நடன ஆசிரியராக பணிபுரிந்தார். பின்னர் சாண்டி இந்த அளவிற்கு சினிமா துறையில் நடன ஆசிரியராக மாறி உள்ளார். இவர் சாண்டி மாஸ்டர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார்.

இது எல்லோருக்குமே தெரிந்தது தான். மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி போரடிக்காமல் விறுவிறுப்பான நிகழ்ச்சியாகவும், செம ஜாலியாகவும் போனதற்கு காரணமாக இருந்தவர் சாண்டி மாஸ்டர் என்றும் சொல்லலாம். ஏன்னா,இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து கடைசி வரை தன்னுடைய நகைச்சுவையான பேச்சும், அட்ராசிட்டி சேட்டைகளும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். இதனால்தான் சாண்டி மாஸ்டர் பிக் பாஸ் சீசன் 3ன் இரண்டாவது பரிசை தட்டிச் சென்றார். அதுமட்டும் இல்லைங்க சாண்டி மாஸ்டர் திரைப்படங்களின் நடன ஆசிரியர் என்று தெரிந்தோடு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் பயங்கரமாக வேற லெவல்ல பிரபலமானார். மேலும், இவர் பிக் பாஸ் வீட்டில் பல பாடல்களைப் பாடியும், ஆடியும் உள்ளார். இதனைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் சாண்டி மாஸ்டர் பாடிய “வி ஆர் தி பாய்ஸ் ” என்ற பாட்டு மூலம் ரசிகர்களை வெறித்தனமாக தெறிக்க விட்டார் என்று கூட சொல்லலாம்.

இதையும் பாருங்க : ஆட்டோகிராப் நடிகை கோபிகாவா இது. இப்போ எப்படி இருகாங்க பாருங்க.

- Advertisement -

தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிந்தவுடன் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய ரசிகர்களையும், சக போட்டியாளர்களையும் சந்தித்து வந்து கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் சாண்டி மாஸ்டர் நிகழ்ச்சி முடிஞ்சுஉடன் பாய்ஸ் அணிக்கு ஹோட்டலில் விருந்து வைத்தார். இதனை தொடர்ந்து சாண்டி மாஸ்டர், கவின், முகென், தர்ஷன் எல்லாருமே ஜாலியா ஃபன் பண்ணிட்டு இருந்தாங்க. இந்நிலையில் சாண்டி மாஸ்டருக்கு பிரபலமான ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் அவார்டு வழங்கினார்கள். மேலும், இந்த மேடையில் சாண்டி மாஸ்டர் தன்னுடைய மனைவியான சில்வியா உடன் இணைந்து விருது வாங்கினார். மேலும், அவர்கள் இருவரும் இணைந்து அந்த மேடையில் ஆடிய ரொமான்ஸ் நடன காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனை பார்த்து ரசிகர்கள் வேற லெவல்ல கலக்குறீங்க பாஸ் என்று கூறியிருந்தார்கள்.

sandy and his wife dance"

மேலும், இந்த நிகழ்ச்சியில் சாண்டியின் முன்னாள் மனைவி காஜலும் பங்குபெற்றார். சாண்டிக்கும் திரையுலகில் பிரபலமான காஜல் பசுபதிக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்கள். பின்பு இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டார்கள். அதற்கு பின்னர் தான் சாண்டி 2017ஆம் ஆண்டு சில்வியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதோடு இவர்களுக்கு ஒரு அழகான லாலா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

-விளம்பரம்-
Advertisement