சாண்டி- காஜலுக்கு இரண்டு குழந்தை இருக்கிறதா ? சர்ச்சைக்கு காஜல் சொன்ன விளக்கம்.!

0
172934
kajal
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியதிலிருந்தே பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் போட்டியாளர்கள் குறித்தும் புட்டு புட்டு வைத்து வருகிறார், பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான காஜல் பசுபதி. அதிலும் இவர் இந்த சீசன் ஆரம்பித்த நாள் முதலே சாண்டிக்கு ஆதரவாக பல்வேறு பேட்டிகளை அளித்து வருகிறார்.

-விளம்பரம்-
Image result for sandy kajal

கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் நடன இயக்குனராக தனது பயணத்தை துவங்கியவர் சாண்டி. தற்போது சிம்பு முதல் சூப்பர் ஸ்டார் ரஜினி வரை  கொரியாகிராஃப் செய்யும் அளவிற்கு வளர்த்துள்ளார். தற்போது பிக் பாஸ் வீட்டில் அனைவரையும் சிரித்து வைத்துக்கொண்டிருக்கிறார் சாண்டி.

இதையும் பாருங்க : விபத்தில் உயிரிழந்த முதல் மனைவி.! மதுரை முத்து வாழ்வில் நடந்த மாபெரும் சோகம்.!

- Advertisement -

மாஸ்டர் சாண்டி நடிகை காஜலுடன் பல ஆண்டுகளாக லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தார். ஆனால், பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனமாற்றம் காரணமாக காஜலை பிரிந்தார் சாண்டி. அதன் பின்னர் சில்வியா என்ற பெண்ணை காதலித்து வந்தார். பின்னர் அவரை திருமணமும் செய்து கொண்டார்.

Image result for sandy kajal

இந்த நிலையில் சாண்டிக்கும் காஜலுக்கு திருமணத்திற்கு பின்னர் இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பதாகவும் சமீபத்தில் ஊடகத்தில் செய்திகள் பரவியது. இதுகுறித்து ரசிகர் ஒருவர் ட்விட்டரில் காஜலிடம் கேட்டுள்ள போது, எனக்கு எந்த குழந்தையும் இல்லை, அதை நான் தவறவிட்டு விட்டேன். இதை பற்றி நான் பல முறை அவரிடம் சொனேன். தற்போது வரை அதை நினைத்து நான் வருத்தப்பட்டு வருகிறேன்.

-விளம்பரம்-

ஏற்கனவே, சாண்டி தன்னை விட்டு பிரிந்ததற்கான காரணத்தை கூறிய காஜல், என்னுடைய பிரேக் அப் பெரிய கதை, நம்ம லவ் டார்ச்சர் தான். வல்லவன் ரீமாசென் மாதிரி பண்ணா யார் தாங்குவா என்று பதில் கூறியுள்ளார். மேலும், எப்போதும் நான் அவருக்கு ஒரு நல்ல தோழி மட்டும் தான் என்றும் கூறியிருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement