தமிழ் சினிமா துறையில் நடிகராகவும், காமெடியராகவும் கலக்கிக் கொண்டிருக்கும் மதுரை முத்து தன்னுடைய முதல் மனைவி குறித்து செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி மனதை உருக வைத்தது.அவர் கூறியது,என் முதல் மனைவி ரஞ்சிதம் நான் கஷ்டப்பட்டு , பல பிரச்சனைகள் நிகழ்ந்த போதெல்லாம் என்னுடன் துணையாக இருப்பார். ஒரு ஆணின் வெற்றிக்கு காரணம் பெண்தான் என்று கூறுவார்கள், அது என் வாழ்வில் நிஜமானது. நான் இந்த அளவிற்கு தற்போது உயர்ந்து நிற்பதற்கு காரணம் என்னுடைய முதல் மனைவிதான். ஆனால் இப்போது நான் நல்ல நிலையில் இருக்கும்போது என்னுடன் அவள் இல்லை. எனக்காக எல்லாத்தையும் செய்தால் என்று மண குமுறலுடன் கூறினார். தமிழ் தொலைக்காட்சிகளில் நகைச்சுவை பேச்சின் மூலம் மதுரை முத்து பிரபலமானார்.
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி ஜங்ஷன் நிகழ்ச்சியின் நடுவராகவும் பங்கேற்று மக்கள் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார். பல திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தன்னுடைய முதல் மனைவி குறித்து கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். நான் என் முதல் மனைவியை முதலில் பார்த்து 10 நிமிடம் தான் ஆனது பார்த்த உடனே நான் அவர்களை பாத்து கல்யாணம் பண்ணிக்கலாமா? என்று கேட்டேன்.
இதையும் பாருங்க : எல்லாரோட ஆர்மியும் எனக்கு ரசிகர்கள்.! கெத்து காட்டிய சேரன்.!
ஆனா அவங்க என்னுடைய குடும்பத்தில் அதிகம் கஷ்டம் இருக்கு என்னுடைய குடும்ப பிரச்சினையை முடித்து விட்டு தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று கூறினார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டு அவருடைய கணவன் வேறு பெண்ணுடன் ஓடிவிட்டார்.மேலும் குழந்தையோடு இருந்த அந்தப் பெண்ணை தான் அவர் திருமணம் செய்து கொண்டார். இந்த செய்தி மக்களிடையே அவர் மீது ஒரு நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவள் என் வாழ்க்கையில் வந்த உடன் பல விஷயங்களில் என்னை மாற்றினார்.
தற்போது நாங்கள் நல்ல நிலையில் இருப்பதற்கு காரணம் அவர்தான். எங்களுக்கு முதலில் சொந்த வீடு கிடையாது, நாங்கள் பெருசாக வீடு கட்டி சந்தோசமாக இருக்கிறோம் அதுக்கு காரணம் முழுவதும் என் மனைவிதான் என்று கூறினார். இப்போது என்னிடம் சொந்த வீடு, கார் இருக்கிறது.பேரு ,புகழ் , மரியாதை எல்லாமே இருக்கிறது ஆனால் அவள் என்னுடன் இல்லை என்று சோகத்துடன் கூறினார். என் மனைவிக்கு சாமி பக்தி அதிகம், ஒரு முறை எனக்கு விபத்து ஏற்பட்டு மண்டையில் நிறைய தயல்கள் போட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள போது அவர் நான் பிழைத்துக் கொண்டால் பழனி மலைக்கு மொட்டை அடித்துக் கொல்வேன் என்று வேண்டினார். ஆனால் அவருக்கு முடி நீளம், அந்த முடியின் அழகையும் தன்னுடைய அழகையும் குறித்து பொருட்படுத்தாமல் என் புருஷனோட உயிரை காப்பாற்றிக் கொடுங்கள் என்று கடவுளிடம் வேண்டி மொட்டை அடித்துக் கொண்டு என்னைப் பார்க்க வந்தாள். இந்த செயல் என்னை பூரிப்படைய வைத்தது.
பெண்களில் பலர் தன்னுடைய கூந்தலையும் அழகையும் தான் பெரிதாக நினைப்பார்கள் ஆனால் அதை எல்லாம் விட என்னை தான் அவள் பெரிதாக நினைத்தால் என்று கூறினார். இப்படி எனக்காக எந்த ஒரு செயலையும் துணிந்தும் எதையும் பொருட்படுத்தாமல் செய்து வந்தாள். 2016ஆம் ஆண்டு என்னுடைய மனைவி கோவிலுக்கு சென்று திரும்பும் போது கார் விபத்தில் அநியாயமாக உயிரிழந்தார்.விபத்தில் அவர் இறந்து விட்டார் என்ற செய்தி கிடைக்கும் போது நான் அமெரிக்காவில் இருந்தேன்.
ஆனால் என்னால் உடனே வரை முடியவில்லை இரண்டு நாட்கள் கழித்து தான் நான் இந்தியாவிற்கு திரும்பினேன். அதன்பின்னர் பல மாதங்கள் கழித்து குழந்தைகளின் நலனுக்காகவும் என் உறவினர்களின் வற்புறுத்தல்காகவும் நான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன் என்று குறிப்பிட்டார்.மனைவி அமைவதெல்லாம் இறைவன் தந்த வரம் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள் ஆனால் அது என் வாழ்க்கையில் நிஜமானது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.