லாஸ்லியாவிடம் அவரது தந்தை குறித்து அன்றே சொன்ன சாண்டி.! வைரலாகும் பிளாஷ் பேக் குறும்படம்.!

0
47383
Sandy
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் தற்போது லாஸ்லியாவின் தந்தை உள்ளே வந்தது தான் பூகம்பமாக வெடித்துள்ளது. கவின் விஷயத்தில் லாஸ்லியா நடந்து கொண்ட விதத்தால் கடுப்பான லாஸ்லியாவின் தந்தை, இதற்காகவா உன்னை அனுப்பினேன். என்னை அனைவரும் காரிதுப்பும்படி செய்துவிட்டாய் என்று கடுமையாக பேசி இருந்தார்.

-விளம்பரம்-

லாஸ்லியாவின் தந்தை லாஸ்லியாவை திட்டும் போது இதுநாள் வரை அவருடன் இருந்த பாய்ஸ் கேங் யாரும் அவரது அருகில் கூட வரவில்லை. குறிப்பாக சாண்டி லாஸ்லியாவின் தந்தைக்கு வழிவிட்டு நகர்ந்து சென்றதை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : அப்போது சேரன் கெட்டவராக தெரிந்தார்.! லாஸ்லியாவின் தந்தை குறித்து பேசிய முன்னாள் வெற்றியாளர்.!

- Advertisement -

இதுநாள் வரை கவிலியாவிற்கு சப்போர்ட் செய்த சாண்டி ஏன் இப்பொது எதுவும் பேசவில்லை என்று கமன்ட் அடித்து வருகின்றனர். இந்த நிலையில் கவின் மற்றும் லாஸ்லியாவிற்கு சாண்டி அறிவுரை வழங்கிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் லாஸ்லியாவிடம் உன் தந்தை எப்படி இந்த நட்பை ஏற்றுக்கொள்வார் என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

கவின் மற்றும் லாஸ்லியா விஷயத்தில் சாண்டி எவ்வளவோ இருவருக்கும் அறிவுரை வழங்கினார். கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் இரவு நேரத்தில் தனியாக பேசும் போது லாஸ்லியாவை உள்ளே எழுந்து போக சொல்லியும் இருக்கிறார். ஆனால், அதனை இருவருமே பொருட்படுத்தவில்லை. அதனால் தான் கடந்த வாரம் கவின் மற்றும் லாஸ்லியா இருவரின் நடவடிக்கைகளால் கடுப்பான சாண்டி இருவரையுமே நாமினேட் செய்திருந்தார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement