அப்போது சேரன் கெட்டவராக தெரிந்தார்.! லாஸ்லியாவின் தந்தை குறித்து பேசிய முன்னாள் வெற்றியாளர்.!

0
9383
Cheran
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஒளிபரப்பான இரண்டு ப்ரோமக்கள் தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் freeze டாஸ்க்கின் போதுலாஸ்லியாவை சந்திக்க அவரது தந்தை பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். 10 வருடங்கள் கழித்து தனது தந்தையை கண்ட சந்தோசத்தில் லாஸ்லியா கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

- Advertisement -

ஆனால், 10 வருடம் கழித்து மகளை சந்தித்த சந்தோசம் லாஸ்லியாவின் தந்தை முகத்தில் இல்லை. அதே போல சற்று முன்னர் வெளியான மூன்றாவது ப்ரோமோவில், லாஸ்லியாவை கவின் விஷயத்தில் கடுமையாக சாடியுள்ளார் லாஸ்லியாவின் தந்தை. மேலும், அந்த ப்ரோமோவில் சேரனை தவிர லாஸ்லியாவின் தந்தையை யாரும் நெருங்ககூடவில்லை.

இதையும் பாருங்க : ஜிம் ஒர்க் அவுட் விடியோவை வெளியிட்ட பிரியா பவானி ஷங்கர்.! மூச்சிரைத்த ரசிகர்கள்.!

இதனால் கவின் மற்றும் லாஸ்லியாவின் உறவிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கபட்டது என்று ரசிகர்கள் கருதி வருகின்றனர். லாஸ்லியாவின் தந்தை கோபபட்டது தான் தற்போது கவின் ஆர்மியாலும் சேரன் ஆர்மியாலும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேரன் குறித்தும் லாஸ்லியாவின் தந்தை குறித்தும் ட்வீட் செய்துள்ளார் முன்னாள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் வெற்றியாளர் கவிஞர் சினேகன்.

-விளம்பரம்-
https://twitter.com/Kavignar_Snehan/status/1171763894668406784

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அந்த தந்தையின் மன வருத்தம் எனக்கு தெரிகிறது. பார்ப்பதற்கு மிகவும் வேதனையளிக்கிறது.
சேரன் இதனை தான் இவ்வளவு நாளும் கூறினார், அப்போது அவர் கெட்டவராக இவர்களுக்கு தெரிந்தார் என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே, கடந்த சில நாட்களுக்கு முன் லாஸ்லியாவிற்கு பச்சோந்தி விருது வழங்கப்பட்டபோது நடந்த பஞ்சாயத்து குறித்து விமர்சனம் செய்திருந்த சேரன், பிக் பாஸில் நாங்கள் இருக்கும் போது, கருத்து வேறுபாடுகள் இருந்த போதும் மரியாதை குறைவாக யாரும் நடக்கவில்லை. அண்ணன் வையாபுரியை அனைவரும் அப்பா ஸ்தானத்தை கொடுத்து மதித்தனர், நடிக்கவில்லை இங்கு ஒரு சிலரை போல். உறவுகளையே அசிங்கப்படுத்துகிறார்கள் என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement