சினிமா திரை உலகில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி பத்தி சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு பிரபலமானவர் மாஸ்டர் சாண்டி. இவர் ஒரு திரைப்பட நடன ஆசிரியர் ஆவார். இவர் சினிமா திரைப்படங்கள் மற்றும் பல நிகழ்ச்சிகளில் நடன ஆசிரியராகவும், பல மேடை நடனங்களையும் தொகுத்து வழங்கி வந்துள்ளார். சாண்டி அவர்கள் பிரபலமான நடன கலைஞர் கலா மாஸ்டரின் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் தான் அறியப்பட்டார்.
அதற்கு பின் இவர் சினிமா துறையில் நடன ஆசிரியராக மாறி உள்ளார். கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார். இதில் சாண்டி இரண்டாம் இடத்தையும் பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாண்டி கவினுடன் இணைந்து உருவாக்கிய ‘வி ஆர் தி பாய்ஸ்’ பாடல் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சாண்டி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்குபெற்றார். மேலும், இந்த நிகழ்ச்சிகளில் கூட சாண்டி பல முறை நடனமாடியுள்ளார். அந்த வகையில் லாரன்ஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘காஞ்சனா 3’ படத்தில் இடம்பெற்ற ‘நண்பனுக்கு கோவில கட்டு’ என்ற பாடலுக்கு அச்சு அசலாக லாரன்ஸ்ஸை போலவே மேடையில் நடமாடியுள்ளார் சாண்டி. அந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் பிரபுதேவாவிற்கு பின்னர் நடனத்தில் பேர் போனவர் லாரன்ஸ் தான். இவரது படங்கள் என்றாலே அதில் நடனங்கள் சிறப்பாக அமையும். அந்த வகையில் சாண்டி ஆடிய இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றது. மேலும், இந்த பாடலுக்கு டிக் டாக்கில் கூட பலர் நடனமாடி வீடியோ வெளியிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.