வனிதாவிற்கும் மீண்டும் டப்பிங் கொடுத்த சாண்டி.! விழுந்து விழுந்து சிரித்த சாண்டி குரூப்.!

0
2833
sandy
- Advertisement -

கடந்த சில வாரமாக சுவாரஸ்யம் இல்லாமல் சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வனிதாவால் கொஞ்சம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. பிக் பாஸ் வீட்டுக்குள் ரீ என்ட்ரி கொடுத்த நாள் முதலே போட்டியாளர்கள் அனைவரையும் சீண்டிவிட்டு அவர்களுக்கு சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பார்த்து வருகிறார். மேலும் கடந்த சில நாட்களாகவே கவினை டார்கெட் செய்து வருகிறார் வனிதா.

-விளம்பரம்-

மேலும், நாமினேஷன் நாளின் போது கவின், ஷெரின் மற்றும் சேரனை நாமினேட் செய்திருந்தார். ஆனால், அதற்கு கவின் கூறியிருந்த காரணம் வனிதாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் வனிதா மற்றும் கவின் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது. கவினை குறை கூறியதால் கடுப்பான கவினின் தோழி லாஸ்லியா, வனிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதையும் பாருங்க : அடையாளம் தெரியாத அளவிற்கு படு மிரட்டலான லுக்கிற்கு மாறிய சினேகன்.! மிரண்டுபோன ரசிகர்கள்.! 

- Advertisement -

நேற்றய நிகழ்ச்சியில் கூட வனிதா, கவின் விஷயத்தை பற்றி தான் பேசிக்கொண்டு இருந்தார். மேலும், மைக்கை கழட்டி வைத்த வனிதா பிக் பாஸிடம் வாக்கு வாதமும் செய்தார். இந்த நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினர்களாக சாக்க்ஷி மற்றும் அபிராமி உள்ளே நுழைந்துள்ளனர்.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் சாண்டி, அபிராமியிடம் பேசிக்கொண்டுஇருந்தார். அப்போது, உள்ள வந்த மூவரில் நீ மட்டும் தான் எப்படி போனியோ அப்படியே உள்ளே வந்திருக்க, ஆனால், மற்ற ரெண்டு பேர் பழி வாங்க வந்திருக்காங்க என்று சாக்க்ஷி மற்றும் மோகன் வைத்யாவை குறிப்பிட்டுகூறி இருந்தார் சாண்டி. தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் சாண்டி வனிதாவை போல டப்பிங் செய்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement