விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கட்டிப்பிடி வைத்தியர் என்ற பெயரை எடுத்தவர் பாடலாசிரியர் சினேகன். தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக இருந்து வந்த இவர் தனது ஆரம்ப காலங்களில் கவிப்பேரரசு வைரமுத்துவிடம் பணிபுரிந்தார்.
பின்னர் தனியாக வந்து பாடல்களை எழுத துவங்கி தற்போது வரை 2500 பாடல்கள் எழுதியுள்ளார். ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் சினேகன். இயக்குனர் அமீர் இயக்கத்தில் வந்த யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ள இவர் பின் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலம் ஆனார்.
இதையும் பாருங்க : மிகப்பெரிய இயக்குனரின் படத்தில் கமிட் ஆகப்போகும் லாஸ்லியா.! ஹீரோ தெரியுமா.!
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நூலகம் ஆரம்பிக்கும் திட்டத்தில் இருந்த சினேகன் தற்போது பணங்காட்டு நரி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம்ஆகி இருந்தார். இந்த படத்தை விக்னேஷ் பாபு இயக்குவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த படத்தை பற்றிய அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில் நடிகர் சினேகன், பொம்மி வீரன் என்ற படத்தில் நடித்துள்ளார். ரமேஷ் மகாராஜா என்பவர் இயக்கம் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இடையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றும் வெளியாகி இருந்தது. அதில் சினேகன் படு வித்யாசமான கெட்டப்பில் இருக்கிறார்.