பிக் பாஸ் வீட்டிற்கே சென்று சாண்டிக்கு பிறந்தநாள் வாழ்த்து.!இது யாருனு தெரியுமா.!

0
6063
Sandi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சியமான போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமானவர் சாண்டி. தனது நடனம் மற்றும் நகைச்சுவையான குணம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சாண்டி.

கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் நடன இயக்குனராக தனது பயணத்தை துவங்கியவர் சாண்டி. தற்போது சிம்பு முதல் சூப்பர் ஸ்டார் ரஜினி வரை கொரியாகிராஃப் செய்யுமா அளவிற்கு வளர்த்துள்ளார். தற்போது பிக் பாஸ் வீட்டில் அனைவரையும் சிரித்து வைத்துக்கொண்டிருக்கிறார் சாண்டி.

நேற்றய நிகழ்ச்சியில் சாண்டியின் பிறந்தநாளை மற்ற ஹவுஸ் மெட்ஸ் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால், சாண்டியை நேரில் சந்தித்து ஒருவர் வாழ்த்து கூறியுள்ளார். அது வேறு யாரும் இல்லை சாண்டியின் மனைவி தங்கை தான்.

இவருடைய பெயர் சிந்தியா, இவர் சாண்டி மாஸ்டரிடம் பல ஆண்டுகளாக நடனம் பயின்று வந்துள்ளார். சொல்லப்போனால் இவர் மூலமாக தான் சாண்டி இவரது அக்காவிடம் பழகி காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கும் சாண்டி என்றால் அப்படி ஒரு பயம் கலந்த பாசமாம்.

நேற்று சாண்டியின் பிறந்தநாளை முன்னிட்டு சிந்தியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாண்டிக்கு வாழ்த்து தெரிவித்து சாண்டியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள அந்த புகைப்படத்தில் பிக் பாஸ் செட் அமைக்கப்பாட்டிற்கும் இ வி பி சிட்டியில் எடுத்ததாக குறிப்பிடுகிறது.