விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜெயிலர் படத்தின் பாடல் வரிகள் இருப்பதாக ரசிகர்கள் கூறிவரும் வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து விஜய் பதில் அளித்துள்ள பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் கடந்த 45 ஆண்டுகளாக தெடர்ந்து சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் அணைத்து படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்து இருக்கிறது. ஆனால், கடந்த சில காலங்களாக ரஜினி நடிப்பில் வந்த எந்த படமும் அந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

குறிப்பாக கடைசியாக வந்த “அண்ணாத்த” திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் படு தோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையை அடுத்து தற்போது ரஜினி நடிக்கும் படம் “ஜெயிலர்”. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இயக்குனர் நெல்சன் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் படம் அந்த அளவிற்கு வெற்றியடையவில்லை எனவே இவருக்கும் “ஜெயிலர்” படத்தின் வெற்றி மிகவும் முக்கியம் என்பதினால் மும்முரமாக படம் இயக்குவதில் ஈடுபட்டுள்ளார்.

Advertisement

இந்த படத்தின் முதல் பாடலான காவாலா பாடல் மாபெரும் வைரலானதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாடல் வெளியாகி இருந்தது. அந்த பாடலில் ‘ உன் அளும்ப பாத்தவன்… உன் ங்கொப்பன் விசில கேட்டவன்… உன் மவனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன்… பேர தூக்க நாலு பேரு… பட்டத்த பறிக்க நூறு பேரு… குட்டி சுவத்த எட்டி பார்த்தா உசுர கொடுக்க கோடி பேரு’ என்ற வரிகள் பக்காவாக ரஜினிக்கு பொருத்தமானதாக இருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் இந்த வரிகள் மறைமுகமாக விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ரஜினி தான் என்றும் சூப்பர் ஸ்டார் என்று ரஜினி ரசிகர்களும், விஜய் தான் இப்போது சூப்பர் ஸ்டார் என்று விஜய் ரசிகர்களும் கூறி வரும் நிலையில் விஜய்யின் ‘இளைய தளபதி’ பட்டமே விஜய்க்கு சரவணன் விட்டுகொடுத்த பட்டம் என்ற புதிய சர்ச்சை கிளம்பி இருக்கிறது.

Advertisement

இதுகுறித்து சரவணன் அளித்த ஒரு பேட்டியில் ‘. 90-களின் இடைப்பட்ட காலம் இருக்கும், நம்ம ஊரில் இருந்து ஒருத்தன் சினிமாவிற்கு போய்யிருக்கான் என்று எனக்கு சேலத்தில் ஒரு பாராட்டு விழா நடத்தினார்கள். அந்த விழாவில்  சேலம் தி.மு.க-வுல பெரிய ஆள் வீரபாண்டி ஆறுமுகம் வந்திருந்தார். சேலத்தில் தளபதி மாதிரி சுத்திக்கிட்டிருந்த தம்பி சரவணன் சினிமாவுக்குப் போயிருக்கார். சினிமாவுக்குன்னு போயாச்சுன்னா ஏதாவது பட்டம் வேண்டாமா? `தளபதி’ன்னே பட்டம் தந்துடலாம்னுதான் நினைச்சேன்.

Advertisement

ஆனா, சென்னையில ஏற்கெனவே ஒரு தளபதி (மு.க.ஸ்டாலினைக் குறிப்பிட்டாராம்) இருக்குறதால, இவருக்கு `இளைய தளபதி’ன்னு கொடுத்துடலாம்’னு முதன்முதலா அந்த வார்த்தையை உச்சரிச்சு எனக்கு அவர்தான்  என்று கூறியுள்ளார் சரவணன். மேலும், பேசிய அவர், அந்த நிகழ்வுக்குப் பிறகு, நான் நடித்து வெளியான படம் `நல்லதே நடக்கும்.’ அந்த படம் டைரக்டர் கே.சங்கர் சாருக்கு அது 100-வது படம். முதன்முதல்ல டைட்டில் கார்டுல `இளைய தளபதி’ சரவணன்னு போட்டாங்க. அதன் பின்னர் நான் நடித்த படங்களில் ‘இளைய தளபதி’னு போட ஆரம்பித்தேன்.

நல்ல போய்க்கொண்டு இருந்த எனக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. பட வாய்ப்புகள் குறைஞ்சதால இந்தப் பட்டத்தை நானும் அப்படியே மறந்துட்டேன். இந்தச் சூழல்லதான் திடீர்னு நடிகர் விஜய் ஹீரோவா நடித்த ஒரு படத்துல அவருடைய பெயருக்கு முன்னாடி `இளைய தளபதி’ பட்டத்தைப் பார்த்தேன். பார்த்ததும் எனக்கு ஷாக். உடனே இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆபீஸ்க்கே நானும் என்னுடைய அண்ணனும் நேர்ல போய்ச் சந்திச்சு, `எங்க டைட்டிலை ஏன் சார் பயன்படுத்தறீங்க’னு கேட்டோம். அதற்கு அவர், `உங்களுக்குப் படம் வந்தா நீங்க போட்டுக்கங்க’ன்னு சொன்னார். என்ன நினைச்சு அவர் சொன்னாரோ, எனக்கும் அதுக்குப் பிறகு படங்கள் அமையலை. அதனால நானும் அப்படியே ஒதுங்கிட்டேன் ‘ என்று கூறியுள்ளார்.

Advertisement