தேவர் ஜெயந்தியில் தந்தை சிலை திறந்த சரவணன். பிக் பாஸ் பிரபலங்கள் பங்கேற்பு.

0
36378
saravanan
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகர் சரவணன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே பல்வேறு திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ள சரவணன். அதன்பின்னர் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் சரவணன் இருந்த போது கல்லூரி படிக்கும்போது பேருந்தில் பெண்களை உரசியதாக கூறியிருந்தது மிகப்பெரிய சர்ச்சையாக பார்க்கப்பட்டது இதனால் சரவணனை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்தார்கள். சரவணன் மன்னிப்பு கேட்ட பின்பு சில நாட்கள் கழித்து பெண்கள் விஷயத்தில் சரியான கருத்துக்களை கூறியதால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினார்கள்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is saravanan-22-1024x576.jpg

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சரவணன் வெளியேறி இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது சரவணன் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது சேரனை தரக்குறைவாக பேசியதால் ஆதரவாளர்கள் வீட்டிற்கு முன்பாக போராட்டம் நடத்தியதாகவும் மேலும் ஒரு எபிசோடில் கமல் போட்டியாளர்கள் இடம் பேசிக்கொண்டிருக்கும்போது சரவணன் கோர்த்து விடலாம் என்று கூறியதால் தான் சரவணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்று பல்வேறு வதந்திகளும் பரவி வந்தது அதேபோல இறுதிப் போட்டிக்கும் சரவணன் வரவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினாலும் இவருக்கு ரசிகர்களின் ஆதரவுதான் வருகிறது. அதேபோல சமீபத்தில் நடிகர் சரவணன் கலைமாமணி விருதையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : ராயப்பனை கொன்ற இவர் யார் தெரியுமா ? எவ்வளவு மாஸா கால்பந்து ஆடுறாரு பாருங்க.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சரவணன் பேசும்போது, என்னுடைய அப்பா அம்மாவுக்கு அவர்கள் உயிரோடு இருந்தவரை நான் எதுவும் செய்ய முடியவில்லை. அவர்கள் மறைந்த பின்னர் அவர்கள் வாழ்ந்த வீட்டில் அவர்கள் நினைவு எனக்கு உறுதிகொண்டே இருந்தது. அதனால் அந்த வீட்டை நான் விற்றுவிட்டேன். அந்த பணத்தில் தற்போது ஒரு கோவில் ஒன்றை கட்டியுள்ளேன்.மேலும், என்னுடைய அப்பா ஒரு போலீஸ் அதிகாரி அதனால் அவரை போல ஒரு ஐயனார் சிலையை செய்துளேன். இன்னும் சிறிது நாளில் அந்த கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற நடைபெற இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார். மேலும், தனது தந்தைக்காக தான் கட்டிய ஐயனார் கோவில் ஒன்றை காண்பித்திருந்தார் சரவணன். அதில் ஐயனாரின் பக்கத்தில் காவலர் சிலையாக தனது அப்பாவின் உருவத்தை சிலையாக வடிவமைத்து வைத்துள்ளார் சரவணன்.

saravanan
This image has an empty alt attribute; its file name is saravanan-23-1024x576.jpg

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சரவணன் அளித்த பேட்டியில்,காலத்துக்கும் அப்பா அம்மா நினைவா இருக்கட்டும்னு அவங்க வசிச்ச வீட்டை வித்து வாங்கின நிலத்துல இந்தக் கோவிலை எழுப்பியிருக்கேன். வீரமுனி பீடத்தின் பக்கத்துலேயே அப்பாவுக்கும் சிலை எடுத்திருக்கேன். அக்டோபர் 30-ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையா நடக்குது. சேலம் மாவட்ட ஆட்சியர், ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவன் ஆகியோர் கலந்துக்க இருக்காங்க. அதேபோல எங்கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கிட்ட போட்டியாளர்களும் திரளா கலந்துக்க இருக்காங்க என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் சேலம் மாவட்டம் வட்டக்காடு கிராமத்தில் நடிகர் சரவணன் கட்டியிருக்கும் விநாயகர், வீரமுனி திருக்கோயிலின் கும்பாபிஷேக விழா இன்று 30-ம் தேதி (30/10/19) காலை 9 மணியளவில்நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் சரவணனிடம் மிகவும் நெருக்கமாக இருந்த கவின் மற்றும் சாண்டி கூட இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டதாக சில செய்திகள் வெளியாகி இருக்கிறது.

Advertisement