குழந்தையுடன் சென்று கலைமாமணி விருதை பெற்றுக்கொண்ட சரவணன்.! வைரலாகும் புகைப்படம்.!

0
8709
saravanan
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சரவணன் பெண்கள் குறித்து தவறாக பேசிய கருத்திற்கு மன்னிப்பு கேட்டு இருந்தார். ஆனால் ,அவர் மன்னிப்பு கேட்டு ஒரு வாரம் ஆன நிலையில் அவர் பேசியதை தவறு என்று கூறி வெளியேற்றப்பட்டது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-
saravanan

இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சரவணன் எந்த ஒரு பேட்டியும் அளிக்காமல் தான் இருந்து வருகிறார். சொல்லபோனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சரவணனை புகைப்படம் கூட வெளியாகாமல் தான் இருக்கிறது. கடந்த வார இறுதியிலாது சரவணன் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சரவணன் குறித்து கமலா போட்டியாளர்களோ வாயே திறக்கவில்லை.

இதையும் பாருங்க : இந்தா ஆரம்பிச்சிட்டாங்களா அடுத்த சண்டையை.! இன்னிக்கி என்ன பஞ்சாயத்தோ.!

- Advertisement -

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழுவில் பரிந்துரைத்தபடி, இயல், இசை, நாட்டியம், நாடகம், கிராமியம், திரைத்துறை மற்றும் சின்னத்திரை போன்ற பல்வேறு கலைப்பிரிவுகளில் புகழ்பெற்ற, திறமைமிக்க 201 கலை வித்தகர்களுக்கு மாநில அளவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான  “கலைமாமணி” விருதுகளை   தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது அதில் சரவணனின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

சமீபத்தில் இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி விருதுகளை வழங்கினார். இந்த விழாவில் சரவணன் தனது குழந்தையுடன் சென்று விருதினை பெற்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சரவணனை பார்த்ததில் ரசிகர்கள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement