சரவணன் குறித்து கமலும் போட்டியாளர்களும் மௌனம் காத்தது ஏன்.! இன்று வருகிறாரா சரவணன்.!

0
8989
saravanan
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 50 நாட்களை நெருங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இருந்து கடந்த திங்கள்கிழமை சரவணன் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியிலும் பார்வையாளர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-
Saravanan

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சரவணன் பெண்கள் குறித்து தவறாக பேசிய கருத்திற்கு மன்னிப்பு கேட்டு இருந்தார். ஆனால் ,அவர் மன்னிப்பு கேட்டு ஒரு வாரம் ஆன நிலையில் அவர் பேசியதை தவறு என்று கூறி வெளியேற்றப்பட்டது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதையும் பாருங்க : டாப் 3 கண்டெஸ்டன்ட்ஸ், எலிமினேஷன், சாண்டி பாடல்.! இன்றைய நிகழ்ச்சியில் இது தான்.! 

- Advertisement -

சரவணன் வெளியேறியதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. சரவணன், சேரனை மரியாதை குறைவாக பேசி இருந்ததால் அவரை வெளியேற்ற சேரனின் ஆதரவாளர்கள் பிக் பாஸ் வீட்டை முற்றுகையிட்டனர் என்றும், கமலை சரவணன், கோர்த்து விடுறேன் என்று கூறியதால் தான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Cheran-Saravanan

அதே போல சரவணன் வெளியேறிய பின்னர் அவரை நினைத்து கதறி அழுத சாண்டி மற்றும் கவின் அவர் வெளியேறியதற்கான காரணத்தை சொல்லுங்கள் என்று பிக் பாஸிடம் கேட்ட போது இதுகுறித்து இந்த வார இறுதியில் கமல் உங்களுக்கு பதிலளிப்பார் என்று பிக் பாஸ் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

ஆனால், நேற்றய நிகழ்ச்சியில் சரவணன் குறித்து கமலும் சரி, போட்டியாளர்களும் சரி எந்த ஒரு பேச்சையும் எடுக்கவில்லை. எனவே, சரவணன் விஷயத்தில் இப்படி மௌனம் காப்பது ஏன் என்ற சந்தேகம் எழுகிறது. ஒருவேளை சரவணன் இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியில் வருவாரா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்றும் சரவணன் வரவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

Advertisement