மோசமான முறையில் சரவணனை அழைத்து சென்ற பிக் பாஸ் குழு.! ஷாக்கிங் புகைப்படம் இதோ.!

0
34379
saravanan
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த திங்கள்கிழமை சரவணன் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி வெளியேற்றப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சரவணன் பெண்கள் குறித்து தவறாக பேசிய கருத்திற்கு மன்னிப்பு கேட்டு இருந்தார். ஆனால் ,அவர் மன்னிப்பு கேட்டு ஒரு வாரம் ஆன நிலையில் அவர் பேசியதை தவறு என்று கூறி வெளியேற்றப்பட்டது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

பெண்களை நான் தவறாக கூறவில்லை என்றும் ஆனால், கல்லூரி படிக்கும் போது நான் பெண்களை பேருந்தில் தவறாக நடந்துள்ளேன். எனவே, என்னை போல யாரும் தவறு செய்துவிடாதீர்கள் என்று சரவணன் விளக்கமளித்திருந்தார். அந்த சமயத்தில் அந்த விளக்கத்தை ஏற்ற பிக் பாஸ் பின்னர், அவரை எதற்காக திடீரென்று வெளியிற்றப்பட்டார் என்று கேள்வி எழும்பியுள்ளது.

இதையும் பாருங்க : நேர்கொண்ட பார்வைக்கு மோசமான விமர்சனம்.! வரலஷ்மியின் சக்க பதில பாருங்க.! 

- Advertisement -

இதனிடையே கன்பெஷன் ரூமில் இருந்து மற்றும் ஒரு வழியாக அழைத்து செல்லப்பட்ட சரவணனை ஏதோ தீவிரவாத கும்பல் அழைத்து செல்வது போல முகத்தை ஒரு கருப்புத்துணியால் போத்தி அழைத்து சென்றுள்ளனர். இந்த புகைப்படத்தை பார்க்கும் போது சரவணன் மீது பரிதாபம் தான் வருகிறது.

ஒருவேளை பிக் பாஸ் வீட்டிற்கு வெளியில் இருக்கும் கட்டமைப்பையோ, எடிட்டிங் அறையையே சரவணன் பார்த்துவிட கூடாது என்பதற்காக அவர் இவ்வாறு அழைத்து செல்லப்பட்டாரா என்று எண்ணமும் தோன்றுகிறது. இருப்பினும் 30 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் இருக்கும் சரவணனை இப்படியா நடத்துவது என்ற எண்ணம் தான் தோன்றுகிறது.

-விளம்பரம்-
Advertisement