வனிதாவை காப்பாற்றிய பிக் பாஸ்.!

0
3395
Vanitha

பிக் பாஸ் வீட்டில் தற்போது சோரநாக்கா லெவலில் இருந்து வருவது வனிதா தான். பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாள் முதலே இவரது குரல் தான் பிக் பாஸ் வீட்டினுள் அதிகம் கேட்டுக்கொண்டிருந்தது. மேலும், இவரது திமிரான நடவடிக்கையால் போட்டியாளர்கள் சிலரால் வெறுக்கப்பட்டும் வருகிறார்.

போதாத குறைக்கு பிக் பாஸ் வீட்டின் முதல் வார தலைவராக வனிதா தேர்ந்தெடுக்கபட்டார். இந்த நிலையில் முதல் வார சிலிமினேஷனில் இருந்து வனிதாவை காப்பாற்ற தனது வேலையை துவங்கிவிட்டது. பிக் பாஸ் வீட்டின் தலைவராக வனிதா செயல்பட்டு வந்த நிலையில் நேற்றோடு அவரது தலைவர் பதவி முடிந்தது.

இதையும் பாருங்க : சிட்டிசன் மீனா ரோலில் முதலில் கமிட் ஆனது இந்த சீரியல் நடிகைதானம்.! அவரே சொன்ன தகவல்.! 

- Advertisement -

இதனால் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. அதில் முகன், மோகன் வைத்யா, ரேஸ்மா, மீரா மிதுன் ஆகியோர் போட்டியிட இறுதியில் மோகன் வைத்யா பெரும்பான்மை பெற்று இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கபட்டுளளார்.

-விளம்பரம்-

மேலும், முதல் வாரம் என்பதால் நேற்று எலிமினேஷன் எதுவும் இல்லை. ஆனால், இந்த வாரம் எலிமினேஷன் உண்டு என்று அறிவித்த கமல் இந்த வார தலைவர் மோகன் வைத்யாவை யாரும் நாமினேட் செய்ய முடியாது என்று கூறினார். இது அனைவரும் அறிந்த ஒன்று தான் என்று யோசித்து முடிப்பதற்குள் கடந்த வார தலைவராக இருந்த வணிதாவையும் நாமினேட் செய்ய முடியாது என்று ஷாக் கொடுத்தார் கமல்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அந்த வார தலைவரை மட்டும் தான் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்ய முடியாது என்ற விதி இருந்தது. ஆனால், இம்முறை கடந்த வாரம் தலைவர் பொறுப்பில் இருந்தவரையும் நாமினேட் செய்ய முடியாது என்று புதிய விதியை கூறி இந்த வாரம் வனிதாவை காப்பாற்றியுள்ளார் பிக் பாஸ்.

Advertisement