பிக் பாஸ் 2-வில் அதிரடி மாற்றம்..! நாட்களை அதிகரித்த பிக் பாஸ்..!எத்தனை நாட்கள் தெரியமா.?

0
1295
bigg-boss

முதன் முதலில் ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 10 சீசன் மேல் ஓடியது. இதனால் இந்த நிகழ்ச்சியை தமிழ்,தெலுங்கு என்று மற்ற மொழிகளிலும் நடத்தினர். மேலும் இந்த நிகழ்ச்சியை தெலுங்கில் ஜூனியர் என். டி. ஆர் தொகுத்து வழங்கினார்.

Bigg-Boss-Telugu

பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இதன் இரண்டம் பாகம் தெலுங்கில் ஆரம்பிக்கபட உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பிரபல தெலுங்கு நடிகர் நாணி தொகுத்து வழங்க இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை அதில் வரும் போட்டியாளர்கலே மிக முக்கியம். அவர்கள் இந்த பிக் பாஸ் வீட்டினுள் 100 நாட்கள் இருக்க வேண்டும். ஆனால் அது சாதாரணமான விடயம் அல்ல இந்த போட்டியில் பங்கேற்ற பல போட்டியாளர்கள் பாதியிலேயே வெளியேறியுள்ளனர்.

bigg boss season 2

கடந்த ஆண்டு தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் என்பது தான் விதிமுறை. ஆனால் சென்ற ஆண்டு தெலுங்கில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி 70 நாட்கள் மட்டுமே நடந்தது. இதனால் இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை தெலுங்கிலும் 100 நாட்கள் நடத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களாம்.