முதல் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற யாஷிகா என்ன செய்தார் தெரியுமா.?

0
2159
yashika-anand
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் இன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்காக போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

-விளம்பரம்-

kamal

- Advertisement -

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்களை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து உலகநாயகன் கமலஹாசன் வழியனுப்பி வைத்தார். பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் இருந்தாலும் இளசுகளின் அபிமான போட்டியாளராக எதிர்பார்க்கபடுவது நடிகை யாஷிகா ஆனந்த் தான்.

சமீபத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து ‘ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த யாஷிகா,  இவர் நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் முதல் போட்டியாளராக நுழைந்தார். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய யாஷிகா ‘ இது எனக்கு ஒரு வித்யாசமான அனுபவமாக இருக்கும். நான் இதுவரை என்னுடைய செல் போன் இல்லாமல் இருந்தது இல்லை. ஆனால், இந்த நிகழ்ச்சியில் 100 நாட்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும். இது எந்த அளவிற்கு கடினமாக இருக்கப்போகிறது என்று தெரியவில்லை’ என்று பேசியள்ளார்.

-விளம்பரம்-

yashika

மேலும் பிக் பாஸ் வீட்டினுள் நுழைந்த யாஷிகா, பிக் பாஸ் வீட்டில் இருந்த மேஜை ஒன்றில் இருந்த உணவு பொருட்களை முகர்ந்து பார்த்து, எது வெஜ் , எது நான் வெஜ் என்று ஆராய்ந்த பின்னர் வெஜ் ‘சென் வெஜ்’ ஒன்றை ருசிபார்த்தார். வீட்டில் அவர் நுழைந்துடன் அவர் செய்த நடவடிக்கைகள் சில நமக்கு ஓவியாவை தான் நினைவூட்டியது. இந்த் நிகழ்ச்சியில் யாஷிகா ஆனந்த் ஓவியா பெற்ற பிரபலத்தை பெறுவாரா,காத்திருந்து காணலாம்.

Advertisement