பிக் பாஸ் வீட்டுக்கு வந்த முதல் நாளே சர்ச்சையை கிளப்பிய பொன்னம்பலம்.! கோபத்தில் ரசிகர்கள்

0
2315
kabali

பிக் பாஸ் என்றாலே அதில் பரபரப்பிற்கும், சர்ச்சைக்கு குறைவே இருந்தது இல்லை. உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சின் இரண்டாவது சீஸின் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. இந்நிலையில் முதல் நாளனே நேற்றே ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.

ponnambalam

இன்னும் ஒரு 3 மாதத்திற்கு மேல் ரசிகர்கள் மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் ஹாட் டாபிக். நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் பல்வேறு போட்டியாளர்களும் கலந்து கொண்டனர். அதில் மக்களுக்கு பரீட்சியமான நபர்கள் என்றால் நடிகர் கபாலி என்னும் பொன்னம்பலத்தை கூறலாம். சினிமாவில் வில்லன் நடிகராக இருந்து இவர் தற்போது பிக் பாஸ் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் என்றும் கூறலாம்.

பல ஆண்டுகளாக சினிமாவில் வில்லன் நடிகராக இருந்த இவருக்கு பல ரசிகர்களும் உள்ளனர். இந்நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டில் இரண்டாவது போட்டியாளராக நுழைந்தார். நடிகர் பொன்னம்பலம் பிக் பாஸ் வீட்டினுள் சென்றதும் அவரை தொடர்ந்து நடிகர் மஹத்தும் சென்றார். உள்ளே சென்ற பிறகு நடிகர் பொன்னம்பலம் சக போட்டியாளர்களுடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்.

bigboss-ponnambalam

அப்போது நடிகர் மஹத், அடுத்து வர போகும் போட்டியாளர் ஆணாக இருப்பாரா பெண்ணாக இருப்பாரா என்று கேட்டுள்ளார். அதற்கு நடிகர் பொன்னம்பலம் ‘ரெண்டுங்கெட்டான இருந்த என்ன செய்வது’ என்று கூறியுள்ளார். அவர் அப்படி கூறியது திருநங்கைகளை கிண்டல் செய்யும் வகையில் இருக்கிறது என்று சர்ச்சைகள் தொடங்க ஆரம்பித்துவிட்டன. சமீபத்தில் நடிகை கஸ்தூரி திருநங்கைகளை கிண்டல் செய்யும் வகையில் கூறிய கருத்தோன்று ஏற்கனவே சர்ச்சையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும்.

போட்டியாளர்களுக்கு வாக்கு அளிக்க “Bigg Boss Vote Tamil” என்ற பக்கத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.