நீச்சல் குள சிறை, 5 என்று குறிப்பிடபட்ட ஸ்பெஷல் பெட் மற்றும் நாற்காலி – இத்தனை மாற்றமா.

0
997
Bb5
- Advertisement -

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று மாலை விஜய் டிவியில்ஆரம்பமானது. இந்நிலையில் இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டிற்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றனர். பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும்போதே ப்ரோமோக்களில் காண்பிக்கப்பட்ட கமல்ஹாசன் படங்கள் வைக்கப்பட்டிருந்தது. இதுவரை நாம் பார்த்த சீசன்களை விட இந்த பிக் பாஸ் சீசன் 5 செட் மிகவும் பிரமாண்டமாக உள்ளது. பசுமை வண்ண காண்செப்ட்களில் இந்த முறை வீட்டை வடிவமைத்து இருந்தார்கள். பிக் பாஸ் வீடு பச்சை வண்ணம் போர்த்தியது போன்று உள்ளது.

-விளம்பரம்-

வீட்டின் முகப்பில் பிக் பாஸ் சீசன் 5 என்கிற வடிவில் டிசைன் செய்யப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்ததும் இடது புறத்தில் அமர்ந்து பேசுவதற்கு என்று ஒரு தனி இடம் உள்ளது. இந்த முறை வீட்டிற்கு வெளியில் பல இடங்களில் அமர்ந்து பேசுவதற்கு பல இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. மழை பெய்யும்போது பயன்படுத்துவதற்கு குடைகளும் வைக்கப்பட்டிருந்தன. வலது புறத்தில் செடி போன்ற டிசைன் செய்யப்பட்டிருந்த ஒரு நீர் தொட்டி இருந்தது.

- Advertisement -

கடந்தமுறை பிக் பாஸ் வீட்டில் மழை நீர் புகுந்ததால் இந்த முறை அதற்கு முன்னெச்சரிக்கையாக தொட்டிகள் கொண்டு இருக்கின்றது. அடுத்ததாக ஜெயில் போன சீசன் போலவே வீட்டிற்கு வெளியே இருக்கும். ஜெயிலுக்குள் கழிப்பறையும் இருக்கும். ஆனால், இந்த முறை ஜெயில் இருந்த இடம் சிறிய அறையாக இருந்தது. ஒரு வேளை அது புகை பிடிக்கும் இடமாக கூட இருக்கலாம். ஆனால், இந்த முறை ஜெயில் வீட்டிற்கு வெளியில் அடியில் வைக்கப்பட்டிருக்கிறது. ஜெயிலுக்கு போகிறவர்கள் இந்த முறை ரொம்பவே கஷ்டப்படுவார்கள். ஜெயிலுக்குள் பாத்ரூம் வசதிகள் இல்லை.

பாதாள சிறை

நீச்சல் குளம் இருந்த இடத்திலேயே தற்போது ஜெயில் இருக்கிறது. இந்த முறை கொரோனா காரணமாக நீச்சல் குளம் பிக் பாஸ் வீட்டில் அமைக்கப்படவில்லை. அடுத்ததாக வீட்டிற்குள் நுழைந்த உடனே பிரம்மாண்டமான இன்டீரியர் டிசைன் உடன் இந்த சீசனில் பிக்பாஸ் வீடு அமைக்கப்பட்டிருந்தது. சீசன் 5 என்பதால் எல்லா இடங்களிலும் ஐந்து என்ற எண் இடம் பெற்றிருக்கிறது. நேராகச் சென்றால் டைனிங் டேபிள் இருக்கின்றது. குறிப்பாக டைனிங் டேபிளில் ஒரு இருக்கையில் மட்டும் 5 என்கிற என் இருந்தது.

-விளம்பரம்-
5 என்று குறிப்பிடபட்ட ஸ்பெஷல் பெட்

கிச்சனில் இந்த முறை எந்தவித மாற்றமுமில்லை. வழக்கம்போல் இந்த முறையும் கொஞ்சம் பெரியதாக ஸ்டோரூம் அமைக்கப்பட்டிருந்தது. அடுத்ததாக அகம் டிவி இருக்கும் இடம் வழக்கம் போல் தான் அதே சோபாக்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அடுத்து கன்பெக்சன் அறை பெரும்பாலும் போட்டியாளர்கள் தங்கள் மனக்குறையை நிக்க இந்த அறைக்கு செல்கிறார்கள் என்பதால் இந்த முறை அமைதியின் நிறமான வெள்ளை நிறத்தில் அறை வடிவமைக்கப்பட்டிருந்தது.

அறையில் பின்புறத்தில் வெள்ளை நிறத்தில் இறகுகள் வடிவமைக்கப்பட்ட இருக்கைகள் இருந்தது. வழக்கம் போல் இந்த முறை ஆண்களுக்கு 5 படுகைகளும், மற்ற படுக்கை விட இந்த பெட் சின்னதாக இருந்தது. இது யாருக்கு என்று தான் தெரியவில்லை. அதே இடத்தில் தான் பாத்ரூம் அமைக்கப்பட்டிருந்தது. இரண்டு குளியல் அறை இரண்டு டாய்லெட் இருந்தன. முந்தைய சீசன் போன்று பெண்கள் என்று அவசர கழிவறை இந்த முறை அமைக்கப்படவில்லை. இந்த வீடு போட்டியாளர்கள் வந்த பிறகு எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement