என்னப்பா இந்த முறை ப்ரோமோவே டிசைன் டிசைனா இருக்கு – வெளியான பிக் பாஸ் 5யின் அடுத்த ப்ரோமோ.

0
687
BB5

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. இந்த சீசனில் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்து இருந்தனர். தமிழில் ஒளிபரப்பாவது போல ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த ஆண்டு கூட பிக் பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது என்ற செய்திகள் கூட வெளியானது. ஆனால், அதனை முற்றிலும் மறுத்தது எண்டிமால் நிறுவனம். இப்படி ஒரு நிலையில் அடுத்த சீசன் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தது.

இதையும் பாருங்க : அத சொன்னதும் ஐயோ தெய்வமேனு என் கால்ல வந்து விழுந்தாரு வடிவேலு – சீமான் அண்னனின் லேட்டஸ்ட் வீடியோ.

- Advertisement -

ஆனால், அடுத்த சீசனும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக இருகிறது என்று உறுதியாகிவிட்டது. வரும் அக்டோபர் மாதம் பிக் பாஸ் 5 நிகழ்ச்சி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ ஷூட்டில் கமல் கலந்துகொண்டு இருந்தார்.

This image has an empty alt attribute; its file name is bb-2-1024x532.jpg

அதே போல செப்டம்பர் மாதம் பிக் பாஸ் ப்ரோமோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் முதல் ப்ரோமோ வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் அடுத்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து வித்யாசமாக வெளியாகும் ப்ரோமோக்களால் இந்த நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு எகிரி இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement