பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செல்லப்போகும் சீசன் 2 போட்டியாளர்கள்.! யார் தெரியுமா.!

0
6933
Bigg-Boss

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்க உள்ள நிலையில், இறுதி போட்டிக்கு யார் முன்னேற போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். ஏற்கனவே முகென் கோல்டன் டிக்கெட்டை வென்று இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளார். எனவே, மீதம் இருக்கும் நான்கு பேரில் யார் இறுதி போட்டிக்கு யார் தகுதி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Image result for bigg boss 2 tamil

இந்த நிலையில் போட்டியின் சுவாரசியத்தை கூட்ட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சீசன் 2 நிகழ்ச்சியில் முதல் இடத்தை பிடித்த ரித்விகாவும் மூன்றாம் இடத்தை பிடித்த ஜனனியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அவர்கள் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் பாருங்க : மிகப்பெரிய மோசடி நிகழ்ச்சி.! எச்ச.! சேரன் வெளியேற்றத்தால் கடுப்பான முன்னாள் போட்டியாளர்.!

- Advertisement -

தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசனை விட கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமாக இருந்தது என்று பலரும் கூறி வருகின்றனர். அதே போல கடந்த சீசனில் நடைபெற்ற டாஸ்குகளில் பெண் போட்டியாளர்களே அடித்து மாய்ந்து கொண்டனர். அதிலும் கோலமாவு டாஸ்கில் ஜனனியை வச்சி செய்தார் ஐஸ்வர்யா.

Image result for rithvika janani

ஆனால், தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் டாஸ்கில் கவனம் செலுத்தாமல் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து தான் விளையாடி வருகின்றனர். எனவே, தற்போது சீசன் 2 போட்டியாளர்கள் உள்ளே சென்று போட்டியை எப்படி ஆட வேண்டும் என்று கற்றுக்கொடுத்தால் சரியாக தான் இருக்கும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.