நானும் தான் குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டேன் – நயன்தாரா வாடகை தாய் விவகாரம் குறித்து சென்ராயன் சொன்ன பதில்.

0
210
- Advertisement -

சமீபத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த இருப்பதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, திருமணம் ஆகி நான்கே மாதத்தில் எப்படி குழந்தை பெற்றார்கள் என்ற விவாதம் சமூக வலைதளத்தில் தொடர்ந்து இருக்கிறது. ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் எதிர்பார்த்து காத்து இருந்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. இவர்களின் இல்லற வாழ்வு சிறக்க திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

அதோடு கடந்த ஜூன் மாதம் முழுவதும் ஹாட் டாப்பிக்காக இருந்தது விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் தான். மேலும், திருமணம் முடிந்த கையுடன் இந்த தம்பதிகள் ஜோடியாக ஹனி மூன் சென்று இருந்தனர். அங்கு எடுத்த புகைப்படங்கள் எல்லாம் இவர்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார்கள். தற்போது இருவருமே படங்களில் பிசியாக பணியாற்றி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்கள்.

- Advertisement -

இரட்டை குழந்தை பெற்ற நயன்:

இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டது, நயன்தாராவும், நானும் அம்மா- அப்பா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசிர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசிர்வதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதம் எங்களுக்காக வேண்டும் என்று கூறியிருந்தார். விக்னேஷ் சிவனின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள்.

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற நயன்:

இருந்தாலும், பலர் கல்யாணம் முடிந்து 4 மாதங்கள் ஆன நிலையில் எப்படி நயன்தாரா குழந்தை பெற்றார்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். பின் நயன்-விக்கி வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்று இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து நயன்-விக்கி தரப்பில் இருந்து எதுவும் கூறவில்லை. தற்போது சோசியல் மீடியாவில் நயன்தாரா- விக்னேஷ் சிவனின் வாடகை தாய் மூலம் பெற்றிருக்கும் இரட்டை குழந்தை குறித்த சர்ச்சை தான் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

சென்ராயனிடன் கேட்கப்பட்ட கேள்வி :

இது குறித்து பலரும் தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சென்ராயனிடம் ‘இன்று இருக்கும் சூழலில் வாடகை தாய் என்பது சரியா, 5 வருடங்கள் கழித்து தான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற வேண்டும் என்ற அரசாங்கம் சட்டம் வைத்திருக்கிறதே’ என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் :-

அந்த கஷ்டம் எனக்கு தெரியும் :

நானே வாடகையில் வீட்டில் தான் இருக்கிறேன். நானே இரண்டு மூன்று மாதங்கள் வீட்டு வாடகை கட்ட வேண்டும். முதலில் நான் அதனை சரி செய்து கொள்கிறேன். அதன் பின்னர் அதைப்பற்றி நான் பேசுகிறேன். குழந்தை என்பது மிகப்பெரிய வரம், அது எல்லாருக்கும் வேண்டும். ஏனென்றால் அந்த வலியும், கஷ்டமும் எனக்குத் தெரியும். குழந்தை இல்லாமல் நான் எத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டேன் என்பது எனக்கு தெரியும். அந்த விஷயம் விக்னேஷ் சிவன் சாருக்கும் நயன்தாரா மேடத்திற்கும் கிடைத்தது சந்தோஷம். ஆனால், நீங்கள் சொல்லித்தான் இந்த விஷயத்தை நான் கேள்விப்படுகிறேன். முதலில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.

Advertisement