சென்ராயன் மனைவிக்கு நடந்த வளைகாப்பு..! வைரலாகும் புகைப்படம்.!

0
492
Bigg-Boss-sendrayan

கடந்த வாரம் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண் போட்டியாளர்களில் ரசிகர்களுக்கு மிகவும் அபிமானவர் என்றால் அது சென்ராயன் மட்டும் தான். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் சென்ராயனுக்கு 4 ஆண்டுகள் குழந்தையின்றி இருந்தது தான் மிகப்பெரிய குறையாக இருந்து வந்தது.

sendrayan

- Advertisement -

திருமணமாகி நான்கு வருடங்களாக குழந்தையின்றி தவித்து வந்த சென்ராயன், பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போது, தான் ஒரு ஆதரவற்ற குழந்தையை தத்தெடுத்துகொள்கிறேன் என்று கமலிடம் கூறியிருந்தார். அதற்கு கமல் ஹாசனும் கூடிய விரைவில் உங்கள் மனைவி கர்ப்பமாகி விடுவார் என்று வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

கமல் கூறிய சில நாட்களிலேயே சென்ராயனின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்திகள் வெளியாகின. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரீஸ் டாஸ்கின் போது பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற சென்ராயனின் மனைவி கயல்விழி, நீ அப்பா ஆகிட்ட என்று சென்ராயனிடம் சொன்னதும் கதறி அழுது கொண்டாடிய சென்ராயன் ஆனந்த கண்ணீரை வடித்தார்.

-விளம்பரம்-

sendrayan

இத்தனை ஆண்டுகள் குழந்தையின்றி தவித்து வந்த சென்ராயனின் மனைவி கர்ப்பமாக இருப்பதை எண்ணி மகிழ்ச்சியில் திளைத்து வரும் சென்ராயன், சமீபத்தில் அவரது மனைவி கயல்விழிக்கு வீட்டிலேயே வளைகாப்பு செய்துள்ளார். வழக்கமாக வளைகாப்பு முடிந்ததும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அவர்களது அம்மா வீட்டிற்கு செல்வது வழக்கம். ஆனால், தனது மனைவி 4 ஆண்டுகள் கழித்து கருவுற்றிருப்பதால் தனது வீட்டிலேயே வைத்து தனது மனைவியை பத்திரமாக பார்த்துக்கொள்கிறேன் என்று சென்ராயன் தனது மாமியாரிடம் அடம்பிடித்துள்ளாராம்.

Advertisement