தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகர் சென்ட்ராயன். இவர் 1984ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி பிறந்தார். தன் சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். ஆனால், அவருக்கான வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. கடந்த 2007ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த பொல்லாதவன் படத்தில் தனுசின் பைக் திருடும் ஒருவராக நடித்திருப்பார். இதன் மூலம் இவர் தமிழில் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பின்னர் சிலம்பாட்டம், ஆடுகளம், மூடர் கூடம், ரம்மி, ரவுத்திரம், மொசகுட்டி, இவனுக்கு தண்ணில கண்டம், யட்சன், மெட்ரோ கொளஞ்சி, தெறி, ஸ்பைடர், நிமிர் ஆகிய பல ஹிட் படங்களில் நடித்தார்.
மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் சென்ட்ராயன் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்நிலையில் சென்ராயன் அவர்களின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் தல அஜித் கெட்ட பில் உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் தல அஜித். தல அஜித்தின் திரைப்பயணத்தில் முக்கியமான படங்களில் மங்காத்தா படமும் ஒன்று.
2011 ஆம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த மங்காத்தா படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், லட்சுமிராய், அஞ்சலி, ஆண்ட்ரியா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தப்படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. மங்காத்தா படத்தில் தல அஜித்தின் ஒவ்வொரு காட்சியும் வேற லெவல் என்றே சொல்லலாம்.
இந்த படத்தில் அஜித் அவர்கள் வெள்ளை நிற கோட் அணிந்து கொண்டு ஒரு காட்சியில் நடித்து இருப்பார். இந்நிலையில் நடிகர் சென்ராயன் அவர்கள் மங்காத்தா அஜித் ஸ்டைலில் உடை அணிந்து கொண்டு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ப்ப்பே… என்ன என்று சொல்லும் அளவிற்கு சென்றாயன் உள்ளார்.