தனது மகனுக்கு ராஜ ராஜ சோழ வம்சாவழியின் வைத்துள்ள சென்ராயன். என்ன பெயர் தெரியுமா ?

0
2332
- Advertisement -

நடிகரும் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளரான சென்ராயன் தனது மகனுக்கு ராஜராஜசோழன் வம்சாவழியில் பெயரை வைத்திருக்கிறார். நடிகர் சென்ராயன், தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் தோன்றி இப்போது மக்களுக்கு பரிட்சயமான ஒரு காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார். அதிலும் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்களில் பேராதரவை பெற்று மேலும் பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-
Bigg Boss Tamil contestant Sendrayan blessed with a baby boy ...

தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சென்ராயன், அதன் பின்னர் ஆடுகளம், சிலம்பாட்டம், மூடர் கூடம் என்று பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவருக்கு சினிமாவை விட அதிகம் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். சினிமாவில் காமெடி முகத்தை பார்த்த நமக்கு இவரது சீரியசான மறுபக்கம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் தெரிந்தது.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது தனக்கு குழந்தை இல்லை அதனால் அனாதை குழந்தைகளை தத்தெடுக்க போவதாக கூறியிருந்தார் சென்றாயன். அதன் பின்னர் கமலும் கண்டிப்பாக அடுத்த  வருடத்திற்குள் உங்கள் மனைவிக்கு குழந்தை பிறக்கும் என்று கூறியிருந்தார். பின்னர் கமல் கூறிய வாக்கு பலித்தது போலவே சென்றாயன் மனைவி கருவுற்றார். சென்ராயன் மனைவிக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள சென்றாயன் பேசுகையில் தனது மகனுக்கு ஒன்றரை வயது ஆகிறது. அவருக்கு செம்பியன் என்று பெயரை வைத்து இருக்கிறேன். செம்பியன் என்ற பெயர் ராஜராஜ சோழ பரம்பரை, அதாவது பொன்னியின் செல்வன் கதையில் வரும் செம்பியன் மாதேவியின் பெயர் தான் அது என்று கூறியுள்ளார். பொன்னியின் செல்வன் கதையில் வரும் செம்பியன் மாதேவி கிட்டத்தட்ட பாகுபலி படத்தில் வரும் ராஜமாதா போன்ற ஒரு கதாபாத்திரம். தனது மூத்த மகன் என்பதால் நடிகர் சென்ராயன் தனது மகனுக்கு செம்பியன் என்று பெயர் வைத்திருக்கிறார்

-விளம்பரம்-
Advertisement